என்யுஎஸ், என்டியு உலகின் தலைசிறந்த ஆய்வகங்கள்

என்யுஎஸ், என்டியு உலகின் தலைசிறந்த ஆய்வகங்கள்

2 mins read
1c416ea9-e236-4aaa-8449-d371d0697b29
-

சிங்கப்பூரின் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்கழ­க­மும் (என்டியு) சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக் கழ­க­மும்(என்யுஎஸ்) உல­கின் தலை­சி­றந்த 50 ஆய்வு நிறு­வ­னங்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பி­டித்­துள்­ளன.

இவற்­றின் ஆய்­வுப் பணி­கள், உல­க­ளா­விய முக்­கிய புத்­தாக்­கக் கண்­டு­பி­டிப்­பா­ளர்­க­ளின் தீர்­வு ­க­ளுக்கு அடித்­த­ள­மாக விளங்கு கின்றன என்று 'கிளா­ரி­வேட்' எனும் அறி­வி­யல் நுண்­ண­றிவு அமைப்பு சான்று வழங்­கி­யுள்­ளது.

2023ஆம் ஆண்­டில் வெளி­ யி­டப்­பட்ட ஆய்­வுக் கட்­டுரை களின் எண்­ணிக்­கையை அடிப் ­ப­டை­யாகக் கொண்டு இரு பல்­ க­லைக்க­ழ­கங்­களுக்கும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளன.

பிரிட்­ட­னைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் 'கிளாரி வேட்' பகுப்­பாய்வு நிறு­வ­னம், நேற்று உல­கின் தலை­சி­றந்த 100 ஆய்­வா­ளர்­களை வரி­சைப்­ப­டுத்­தும் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

இதில் 1,013 ஆய்­வுக் கட்­டு­ரை ­க­ளு­டன் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்கழ­கம் ஏழா­வது இடத்­தையும் 753 ஆய்­வுக் கட்­டு­ரை­ க­ளு­டன் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கம் 22வது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

இந்­தப் பட்­டி­ய­லில் சீனா­வில் உள்ள சீன அறி­வி­யல் கல்வி நிறு­வ­னம் முதல் இடத்­தை­யும் இதற்கு அடுத்­த­டுத்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வில் உள்ள மேச­சூ­செட்ஸ் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்கழ­க­மும் ஸ்டான்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மும் வரி­சைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

உல­க­ளா­விய கண்­டு­பி­டிப்­பா­ளர்­க­ளான 3எம், ஏர்­பஸ், ரோல்ஸ் -ராய்ஸ் உள்­ளிட்ட ஆய்வு நிறு­வ­னங்­களை 'கிளா­ரி­வேட்' தர­வ­ரி­சைப்­ப­டுத்­து­வது இதுவே முதல் முறை. மேலும் கடந்த பத்து ஆண்­டு­ க­ளாக ஆய்­வா­ளர்­க­ளால் மேற்­கோள் காட்­டப்­படும் பட்­டி­ய­லை­யும் அது வெளி­யிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே என்­டியு ஏழா­வது இடத்­தைப் பிடித்­தது குறித்து கருத்­துத் தெரி­வித்த என்­டியு ஆய்­வுப் பிரி­வின் உத­வித் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் லியுக் ஓங், மனி­த­கு­லத்­திற்கு நன்­மை­ய­ளிக்­கும் ஆய்­வு­களில் ஆழ­மாக ஈடு பட்டதற்கும் அதன் கடப்­பாட்­டுக்­கும் வழங்­கப்­பட்ட சான்று இது, என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

உயர்­மட்ட தாக்­கத்தை ஏற்­ ப­டுத்­தும் ஆய்­வு­களில் ஈடு­ப­டு­வது, தொழில்­துறை மற்­றும் சமூ­கத்­திற்கு பய­ன­ளிக்­கும் தொழில் ­மு­னை­வோர் கண்­டு­பி­டிப்­பு­களில் ஈடு­ப­டு­வது 'என்­டியு 2025' ஐந்­தாண்­டுத் திட்­டத்­தின் முக்கிய நோக்­க­மா­கும் என்­றும் அவர் சொன்னார்.

என்­யு­எஸ்­ஸின் ஆய்வு, தொழில்­நுட்­பப் பிரி­வின் துணைத் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் சென் டுசு­ஹான், குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் தலை­சி­றந்த ஆய்­வுப் பணி­களில் தொடர்ந்து ஈடு­பட என்யு­எஸ் கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.