பாதுகாப்பு அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
தனியார் பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி பாதுகாப்பு அதிகாரிகளை அலைக்கழிப்பது, தாக்குவது, காயம் ஏற்படுத்துவது போன்ற குற்றச்செயல் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் 2022 மே மாதம் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது.
இதன்படி பாதுகாப்பு அதிகாரியை வேண்டுமென்றே காயப் படுத்தினால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும்.
இந்த நிலையில் அஃபின்டே முஹமட் என்பவரைத் தாக்கி, இழுத்துத் தள்ளியதாக 45 வயது அஜித்பால் சிங் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி விடியற்காலை 12.20 மணிக்கு புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 41ல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புப்பில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து விடியற்காலை 12.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை காவல்துறை தெரிவிக்கவில்லை.
திரு அஜித்பால் சிங் மீதான வழக்கு மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

