போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் ஓர் ஆடவரையும் ஒரு பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர், இருவரும் சிங்கப்பூரர்கள் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
மொத்தம் 1.663 கிராம் ஹெராயின், 1.32 கிராம் கஞ்சா, 17 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
அதன் மதிப்பு சுமார் 183,000 வெள்ளி. 54 வயது ஆணிடமிருந்தும் 45 வயது பெண்ணிடமிருந்தும் இவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.
இந்தச் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட ஹெராயினின் அளவு, ஒரு வாரம் 790 போதைப் புழங்கிகள் பயன்படுத்தக்கூடியது என நேற்று வெளியிட்ட அறிக்கையில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு, இதே காலகட்டத்தில் 190 போதைப் புழங்கிகள் பயன் படுத்த முடியும்.
கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் வட்டாரத்தில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடைய வாகனத்தில் இருந்து 7 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து டெக் வாய் கிரசெண்டில் உள்ள வீட்டையும் அதிகாரிகள் சோதனையிட்டு எஞ்சிய போதைப் பொருள் களைக் கைப்பற்றினர்.
இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

