ரச்சனா வேலாயுதம்
நூலகம்@சைனாடவுன் அதன் 10வது ஆண்டு விழாவை நேற்று மாலை 6.00 மணியிலிருந்து சைனாடவுன் பைண்ட் மாலில் கொண்டாடியது. தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சீனக் கலை, கலாசாரத்தை மையமாகக் கொண்ட முதல் சமூக ஆதரவு, தன்னார்வத் தொண்டு நூலகமாக நூலகம்@சைனாடவுன் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மக்களிடையே சீனக் கலாசாரத்தை வளர்க்க இந்த நூலகத்தில் பல சீனக் கலை, கல்வி, இசை, கலாசாரம் சார்ந்த நூல்களை வைத்து அதன் தொடர்பாக நிகழ்ச்சி களையும் நடத்தி வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நூலகத்துடனும் ஒன்றிணைந்த அமைப்புகளுடனும் இந்தக் கொண்டாட்டம் நடந்தது.
பாரம்பரிய சீன இசைக் கருவிகளுடன் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்தக் கொண்டாட்டத்தில் நூலகத்தின் தொண்டூழியர்கள் உட்பட சைனாடவுன் வட்டார மக்களும் சீன சமூக அமைப்புகளும் கலந்துகொண்டன.
இந்த நூலகத்தை கடந்த ஆண்டுகளாக ஆதரித்து வந்த குவான் இம் தொங் ஹூட் சோ ஆலயம் இன்னும் ஐந்து ஆண்டு களுக்கு இதைத் தொடர்ந்து செய்ய உறுதி பூண்டுள்ளதை அமைச்சர் பகிர்ந்துக்கொண் டார்.
நூலகத்தின் 10வது பிறந்தநாளை அமைச் சரும் நூலகத்தின் தொண்டுழியர்களும் கேக் வெட்டி கொண்டாடினர். அங்கிருந்தவர்களுக்கு சீன உணவும் பரிமாறப்பட்டது.
இதில், இந்த நூலகத்தின் முக்கியத்துவத்தையும் இது போன்ற சமூக முயற்சிகளின் அவசியத்தையும் அமைச்சர் டியோ கூறினார்.
"தொண்டூழியம் மூலமாக இந்த நூலகம் செயல்படுவதை எண்ணி நாம் பெருமையடைய வேண்டும். 2026க்குள் 6,500 தொண்டூழியர்களைச் சேர்க்க இந்த நூலகம் உறுதி பூண்டுள்ளது," என்று அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.

