$60,000 ஊழல்; கெப்பல் ஃபெல்ஸ் இரு முன்னாள் அதிகாரிகளுக்கு அபராதம், தண்டம்

$60,000 ஊழல்; கெப்பல் ஃபெல்ஸ் இரு முன்னாள் அதிகாரிகளுக்கு அபராதம், தண்டம்

2 mins read
c1ef3ef7-8d2b-463b-aa2b-7b6dba34b60d
-

ஊழல் புரிந்த கெப்­பல் ஃபெல்ஸின் இரு முன்­னாள் அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அவர்­கள் செய்த ஊழ­லின் மொத்த மதிப்பு $60,000. வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல லஞ்­சம் பெற்­ற­தும் ஊழல் குற்­றச்­சாட்­டு­களில் அடங்­கும்.

வோங் கோக் செங், 72 சீனா­வுக்­கும் டான் செங் சியா, 64 ஜப்­பான் போன்ற இடங்­க­ளுக்­கும் சென்று உல்­லா­ச­மாக இருந்­துள்­ள­னர்.

கெப்­பல் ஃபெல்ஸி­லி­ருந்து நீக்­கப்­பட்ட இரு அதி­கா­ரி­களும் தங்­கள் மீது சுமத்­தப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக் கொண்­ட­னர்.

'கோரஸ் சவுத் ஈஸ்ட் ஏஷியா' என்ற நிறு­வ­னத்­துக்­குச் சலு­கை­கள் வழங்­கு­வ­தற்கு கைமா­றாக அந்­நி­று­வ­னத்­தைச் சேர்ந்த வட்­டார பொது நிர்­வா­கி­யான 53 வயது தோங் சீ கோங்­கி­ட­மி­ருந்து அவர்­கள் லஞ்­சம் பெற்­றுள்­ள­னர்.

குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­போது கெப்­பல் ஃபெல்ஸில் வோங் கொள்­மு­தல் மூத்த நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றி­னார். டான் அதே நிறு­வ­னத்­தில் மூத்த துணை ஒப்­பந்த நிர்­வா­கி­யா­க­வும் உதவி பொது நிர்­வா­கி­யா­க­வும் பணி­பு­ரிந்­தார்.

டான் புரிந்த ஊழ­லின் மொத்த மதிப்பு சுமார் 53,672 வெள்ளி. இதில் 50,000 வெள்­ளியை அவர் திருப்­பிக் கொடுத்­துள்­ளார்.

நேற்று நீதி­மன்ற விசா­ர­ணை­யின்­போது டானுக்கு 85,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு 3,672,35 வெள்ளி தண்­டம் செலுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அவ­ரது ஜப்­பான் பய­ணத்­துக்கு தோங் $24,000 வெள்ளி கொடுத்­தி­ருந்­த­தாக லஞ்ச ஊழல் புல­னாய்­வுப் பிரிவு விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

தோங் இதே போன்று 2008 அல்­லது அதற்கு முன்­பும் செய்­துள்­ளார்.

2006ல் நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில் வோங்­கும் அவ­ரது மனை­வி­யும் சீனா செல்ல தோங் $5,850 கொடுத்­தி­ருந்­தார்.

வோங் லஞ்­ச­மா­கப் பெற்ற பணத்தை முழு­மை­யாக திருப்­பிக் கொடுத்­துள்ள நிலை­யில் நேற்று அவ­ருக்கு 15,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே லஞ்­சம் கொடுத்­த­தா­கக் கூறப்­படும் தோங் 2008ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­டார். 2022ல் சிங்­கப்­பூர் திரும்­பிய அவரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

இவர் மீதான வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.