அமெரிக்கா-சீனா பகைமை அனல் தணிய வேண்டும்

அமெரிக்கா-சீனா பகைமை அனல் தணிய வேண்டும்

2 mins read
0857787d-3dc0-4910-ad70-7484e5f4de5b
-

உலகம் ஆவன செய்ய வேண்டும் என தற்காப்பு அமைச்சர் வலியுறுத்து

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் பகைமை சூடு கூடு­கிறது. அது கொதிக்­கும் நிலையை இன்­னும் எட்­ட­வில்லை. இருந்­தா­லும் அதி­க­ரித்துள்ளது.

அந்த அன­லைத் தணிக்க தன்­னால் ஆன அனைத்­தை­யும் உல­கம் செய்ய வேண்­டும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் வலி­யு­றுத்­தினார்.

மியூ­னிக் 59வது பாது­காப்பு மாநாட்­டில் உரை­யாற்­றிய அவர், தைவான் பிரச்­சினை கார­ண­மாக மோதல் இடம்­பெ­றக்­கூ­டாது என்றே அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் விரும்­பு­கின்­றன. ஆனா­லும்­கூட மோதல் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது என்­றும் அத்­த­கைய ஒரு நிலை ஏற்­பட்­டால் அதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்­கும் என்­றும் தற்­காப்பு அமைச்­சர் எச்­ச­ரித்­தார்.

தைவான் சுதந்­திர முயற்சி மோத­லைக் கிளப்­பி­வி­டும் என்­றா­ர­வர். பிலிப்­பீன்­சில் மேலும் பல தளங்­களை எட்­டு­வ­தற்­கான முயற்­சி­களை அமெ­ரிக்கா அண்­மை­யில் மேற்­கொண்­டது. தென்­சீ­னக் கடல் பகு­தி­யி­லும் தைவான் நீரி­ணை­யி­லும் ராணுவ வலி­மையை சீனா அதி­க­ரித்து இருக்­கிறது.

இவை எல்­லாம் போருக்­கான அறி­கு­றி­க­ளா­கப் பார்க்­கப்­ப­ட­லாம் என்­றா­ர­வர். இருந்­தா­லும்­கூட போர் முரசு இன்­ன­மும் ஒலிக்­கத் தொடங்­க­வில்லை என்று அந்த உயர்­நிலை கூட்­டத்­தில் ஆற்­றிய உரை­யில் டாக்­டர் இங் தெரி­வித்­தார். அந்த வரு­டாந்­திர மூன்று நாள் கூட்­டத்­தில் தற்­காப்பு, வெளி­யு­ற­வுக் கொள்­கை­களை வகுக்­கும் உயர் அதி­கா­ரி­கள் கலந்­து­கொள்­கி­றார்­கள்.

ஆசி­யா­வில் போர் மூண்­டால் அது ஆசி­யா­வுக்கு மட்­டு­மன்றி உல­கிற்கே பேர­ழி­வாக இருக்­கும் என்­பதை டாக்­டர் இங் சுட்­டி­னார்.

அத்­த­கைய ஒரு போரை நியா­யப்­ப­டுத்­தக்­கூ­டிய அள­வுக்கு கார­ணங்­கள் எது­வும் இப்­போது இல்லை என்று அவர் தெரி­வித்­தார். அமெ­ரிக்கா-சீனா உறவு அண்­மைய வாரங்­களில் மிக­வும் பதற்­றம் அடைந்து இருக்­கிறது.

அமெ­ரிக்க வானில் ஊடு­ரு­விய சீனா­வின் பலூன் சுட்டு வீழ்த்­தப்­பட்ட சம்­ப­வம் இன்­ன­மும் பர­ப­ரப்­பாக பேசப்­பட்டு வரு­கிறது.

டாக்­டர் இங் பிரத்­தி­யேக வட்ட மேசை கூட்­டத்­தில் உரை­யாற்­றி­னார். தற்­காப்பு அமைச்­சர் 11வது முறை­யாக மூனிச் பாது­காப்பு மாநாட்­டில் கலந்­து­கொள்­கி­றார்.

டாக்­டர் இங் மியூ­னிக் நக­ரில் இன்று வரை தங்கி இருப்­பார். கருத்­த­ரங்­கில் பல நாடு­க­ளைச் சேர்ந்த இளம் தலை­வர்­க­ளு­டன் அவர் உரை­யா­டு­வார். பல நாடு­க­ளின் தற்­காப்பு அமைச்­சர்­க­ளை­யும் அவர் சந்­திப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.