பங்ளாதேஷ் ஊழியர் மரணம்: கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான முதல் சம்பவம்

பங்ளாதேஷ் ஊழியர் மரணம்: கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான முதல் சம்பவம்

2 mins read
8bf1d1b4-98ad-41f5-9287-bc5256aa6df6
-

பங்­ளா­தேஷ் நாட்­டைச் சேர்ந்த 28 வயது ஆட­வர், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொவிட்-19க்கு எதிரான மொடர்னா/ஸ்பைஸ்­வேக்ஸ் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொண்­டார்.

அதற்கு 21 நாள்­கள் கழித்து அவ­ருக்கு இத­யத் தசை அழற்சி ஏற்­பட்டு அதன் கார­ண­மாக அவர் மர­ணம் அடைந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பி­லான முதல் மரணம் இது­தான் என சுகா­தார அமைச்சு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது. அந்த ஊழி­யர், 2021 ஜூலை 9ஆம் தேதி தனது வேலை இடத்­தில் மயங்கி விழுந்­தார்.

இந்த மர­ணம் பற்றி விசா­ரித்த மரண விசா­ரணை அதி­காரி, இது துர­தி­ருஷ்­ட­வ­ச­மான மருத்­து­வச் சம்ப­வம் என்று தீர்ப்­பில் தெரி­வித்­தார். மர­ணம் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி கார­ண­மாக ஏற்­பட்டு இருக்­கும் வாய்ப்பு உள்­ள­தாக தீர்ப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஊழி­யர் மர­ணம் அடைந்­ததை அடுத்து, சுகா­தார அமைச்­சின் தடுப்­பூசிப் பாதிப்பு நிதி உத­வித் திட்­டத்­தின்­கீழ் ஆக அதி­க­மாக $225,000 தொகை அவ­ரின் குடும்­பத்­திற்­குக் கொடுக்­கப்­படும்.

இதற்­கான ஏற்­பா­டு­களை மனி­த­வள அமைச்­சு­டன் சேர்ந்து சுகாதார அமைச்சு செய்து வரு­கிறது. சிங்­கப்­பூ­ரில் தேசிய தடுப்­பூ­சிச் செயல்­திட்­டத்­தின்­கீழ் 17 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இரு வகை திறன்கொண்ட தடுப்­பூசி கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய மர­ணங்­கள் 100,000 தடுப்பூசிக்கு 0.1 என்ற அள­வில் இருக்­கிறது. ஒரு­வகை திறன்கொண்ட தடுப்­பூ­சி­யைப் பொறுத்­த­வரை இந்த விகி­தம் 100,000 தடுப்பூசிக்கு 1.1 ஆகும்.

இத­யத் தசை அழற்சி என்­பது வைரஸ் கிரு­மித்­தொற்று மூலம் ஏற்ப­டக்­கூ­டி­யது. சில நேரங்­களில் குறிப்­பிட்ட வேதிப்­பொ­ருள், சில வகை மருந்­து­கள் ஒவ்­வாமை, இதர வகை தொற்­று­களும் அதற்­குக் கார­ண­மா­க­லாம்.