பிடாடாரி ரோடு மட்டத்திற்கு பார்ட்லி ரோடு உயர்த்தப்படும்

பிடாடாரி ரோடு மட்டத்திற்கு பார்ட்லி ரோடு உயர்த்தப்படும்

2 mins read
5e13fd49-1064-4801-b60e-42b4879206ab
-

இரண்டும் 1 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பதாக வீவக விளக்கம்

தோ பாயோ, பொத்­தோங் பாசிருக்கு அருகே அமைந்­துள்ள பிடா­டாரி குடி­யி­ருப்­புப் பேட்டையில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்தின் 10,000 வீடு­கள் அமைந்­திருக்­கும்.

அந்­தப் பேட்­டை­யில் குடி இருப்­போர், பார்ட்லி ரோட்­டுக்­கும் சிராங்­கூன் அவென்யூ 1க்கும் நேர­டி­யா­கச் செல்­வ­தற்­கான வழியைப் பெற மேலும் அதிக காலம் காத்­தி­ருக்க வேண்டி இருக்­கும் என்று தெரி­கிறது.

பிடா­டாரி பார்க் டிரைவ்-1 என்ற 1.6கி.மீ. நீள­மான, இரு தட இரு­வ­ழிப் பாதை­தான் பிடாடாரி பேட்­டை­யின் மிக முக்கி­ய­மான போக்­கு­வ­ரத்து வழி­யாக இருக்கும் என்று கழ­கம் அறி­வித்­துள்­ளது.

அந்­தப் பாதையை பார்ட்லி ரோடு, சிராங்­கூன் அவென்யூ 1 ஆகிய இரண்டு சாலை­க­ளோ­டும் 2022 நான்­கா­வது காலா­ண்டில் இணைக்க திட்­ட­மி­டப்­ப­பட்­டது. ஆனால், கொவிட்-19 கார­ண­மாக பணி­கள் தாம­த­ம­டைந்­தன.

இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் அந்த வேலை முடிய இருந்­தது. ஆனால் இப்­போது அது மேலும் தாம­த­ம­டை­யும் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

பிடா­டாரி பார்க் டிரை­வும் பார்ட்லி ரோடும் வேறு வேறு உயரத்­தில் இருக்­கின்­றன.

இரண்­டுக்கும் இடை­யில் 1 மீட்டர் உயர இடை­வெளி உள்ளது. பிடா­டாரி பார்க் டிரைவ் உய­ர­மாக இருக்­கிறது. ஓர் இடத்­தில் அந்த உய­ரம் சுமார் 1.2 மீட்­ட­ராக உள்­ளது. இத­னால் பார்ட்லி ரோட்டை கட்­டம் கட்­ட­மாக உயர்த்த வேண்டியிருக்­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்­ட­தற்கு கழ­கம் விளக்­கம் அளித்­தது.

வேலை­களை இந்த ஆண்­டின் முதல் பாதியில் முடித்து­வி­ட­லாம் என்­று­தான் தொடக்­கத்­தில் மதிப்­பி­டப்­பட்­டது. ஆனால், இந்த இடத்­தின் சிக்க­லான அமைப்பு கார­ண­மாக கட்­டு­மா­னப் பணி­களுக்கு மேலும் கால அவ­கா­சம் ஆகும்­ போல் தெரி­கிறது என்று கழ­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

பணி­கள் எப்­போது முடி­யும் என்­ப­தைத் தெரிவிக்க கழ­கத்­தால் இய­ல­வில்லை. திரவ தார் போன்ற சாலை கட்­டு­மானப் பொருள்­களைக் கொண்டு அடுக்கடுக்காக பார்ட்லி ரோட்டை உயர்த்த வேண்­டும்.

அந்த அடுக்­கு­கள் எல்­லாம் இறுக வேண்­டும். இப்­படி தேவை­யான அள­வுக்கு அந்­தச் சாலை மட்­டத்தை உயர்த்த வேண்­டும் என்று அவர் விவ­ரித்­தார்.

பிடா­டாரி பார்க் டிரைவ் மட்­டத்தை பார்ட்லி ரோடு மட்­டத்­திற்­குத் தாழ்த்­து­வ­தும் சாத்­தி­ய­மல்ல என்று பேச்­சா­ளர் கூறி­னார்.

இத­னி­டையே, இது­பற்றி கருத்து தெரி­வித்த ஓய்­வு­பெற்ற போக்­கு­வ­ரத்து பொறி­யா­ளர் கோபி­நாத் மேனன், "புதி­தா­கப் போடப்­படும் பிடா­டாரி பார்க் டிரைவ்­வின் மட்­டத்­தைக் குறைத்­தால் அதன் அருகே அமை­யும் வீடு­க­ளின் உய­ரம் கூடி­வி­டும்.இத­னால் சரி­வான பகு­தி­களை உரு­வாக்க வேண்­டும். இதன் கார­ண­மாக இடம் விர­ய­மா­கும்," என்று தெரி­வித்­தார்.

பிடா­டாரி பார்க் டிரைவ், 57 ஹெக்­டர் பரப்புள்ள பிடாடாரி குடியிருப்புப் பேட்­டையை அப்­பர் அல்­ஜு­னிட் ரோடு, அப்­பர் சிராங்­கூன் ரோடு ஆகி­ய­வற்­றோ­டும் இணைக்­கிறது.