மெக்பர்சனில் பல வாகனங்கள் விபத்து: இரண்டு பேர் காயம்

மெக்பர்சனில் பல வாகனங்கள் விபத்து: இரண்டு பேர் காயம்

1 mins read
33bef39d-6e62-42b7-9047-9560aab5bfed
-

மெக்­பர்­ச­னில் சனிக்­கி­ழமை பிற்­ப­க­ல் மூன்று கார்­கள், ஒரு லாரி, ஒரு சைக்­கிள் சம்­பந்­தப்­பட்ட விபத்­தில் இரு­வர் காயம் அடைந்­து­விட்­ட­னர்.

அந்த விபத்து, எண் 110 மெக்­பர்­சன் ரோடு அருகே பிற்­ப­கல் சுமார் 3.35 மணிக்கு நிகழ்ந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

காயம் அடைந்­த­வர்­கள் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அவர்­களில் 73 வயது கார் ஓட்­டு­ந­ரான ஆட­வர் ஒரு­வர். 59 வயது சைக்­கி­ளோட்­டி­யான மாது மற்­றொ­ரு­வர்.

விபத்து தொடர்­பில் 51 வயது கார் ஓட்­டு­நர் ஒரு­வர் காவல்­துறை விசா­ர­ணை­யில் உதவி வரு­கி­றார்.