2022ல் $640,000 மதிப்புடைய சுகாதாரப் பொருள்கள் பறிமுதல்

2 mins read
6466ef14-c5a3-41ca-9582-218aae5d915f
-
multi-img1 of 2

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் கடந்த ஆண்டு அதி­கப்­ப­டி­யாக கைப்­பற்­றிய பொருள்­களில், பாலி­யல் நட­வ­டிக்­கையை மேம்­ப­டுத்த உத­வும் பொருள்­களும் அடங்­கும்.

கடந்த ஆண்டு முழு­வ­தும் கைப்­பற்­றப்­பட்ட 737,000 பொருள்­களில் அவை 39 விழுக்­காடு பங்கு வகித்­தன. இணை­ய விற்பனைத்­ த­ளங்­களில் இருந்து நீக்­கப்­பட்ட பொருள் பட்­டி­ய­லி­லும் அவை 55 விழுக்­காடு பங்கு வகித்­தன என்று ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

கடந்த ஆண்டு பறி­மு­தல் செய்­யப்­பட்ட அனைத்து பொருள்­க­ளின் மதிப்பு $640,000. 2021 பறி­மு­தல் செய்­யப்­பட்ட பொருள்­களின் மதிப்­பை­விட இது $200,000 அதி­கம். சட்­ட­வி­ரோத விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக அம­லாக்க நட­வ­டிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டதே இதற்­குக் கார­ணம் என்று ஆணை­யம் கூறி­யது.

ஆக அதி­கம் கைப்­பற்­றப்­பட்ட பொருள் கோடின் இரு­மல் மருந்து. கடந்த ஆண்டு கைப்­பற்­றப்­பட்ட பொருள்­களில் இது 46 விழுக்­காடு பங்கு வகித்­தது.

சட்­ட­வி­ரோத சுகா­தா­ரப் பொருள்­களை விநி­யோ­கித்து, விற்­ற­தற்­காக கடந்த ஆண்டு 15 பேருக்கு எதி­ராக சட்ட நட­வடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்­களில் ஒரு­வ­ரான 59 வயது ஆட­வ­ருக்கு ஆறுமாத, இரண்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கோடின், வலி நீக்­கும் மருந்­து­களை அவர் சட்­ட­வி­ரோ­த­மாக விற்­றார்.

ஒவ்­வாமை, 'எக்­ஸிமா' சரு­மப் பிரச்­சி­னை­யைக் குணப்­ப­டுத்­தும் என விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்ட சரு­மத்­தில் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பொருள்­கள், இணை­ய விற்பனைத்­ த­ளங்­களில் இருந்து நீக்­கப்­பட்ட பொருள் பட்­டி­ய­லில் 43 விழுக்­காடு பங்கு வகித்­தன. வலி நிவா­ர­ணப் பொருள்­கள், உடல் எடை­யைக் குறைக்­கும் பொருள்­கள் தலா 1 விழுக்­காடு பங்கு வகித்­தன.

இணை­ய விற்பனைத் ­த­ளங்­களில் இருந்து மொத்­தம் 477 சட்­ட­வி­ரோத பொருள் பட்­டி­யல்­களை ஆணை­யம் நீக்­கி­யது. கடந்த ஆண்டு விற்­ப­னை­யா­ளர்­களி­டம் ஆணை­யம் 192 முறை எச்­ச­ரிக்கை விடுத்­தது. 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பு­நோக்க, இவ்விரு எண்­ணிக்­கை­யும் ஏறக்­கு­றைய பாதி அள­வா­கும்.

மருத்­து­வப் பொருள்­கள் மற்றும் தடை செய்­யப்­பட்ட பொருள்­களைக் கொண்ட 12 பொருள்­கள் குறித்து கடந்த ஆண்டு ஆணை­யம் பொது­மக்களுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தது.

அத்­த­கைய பொருள்­களை உட்­கொண்ட அல்­லது பயன்­ப­டுத்­திய இளம் பிள்­ளை­கள் மூவர் உட்­பட 10 பேர் கடு­மை­யான பக்­க­விளைவு­க­ளால் அவ­தி­யுற்­ற­னர்.

சட்­ட­வி­ரோத சுகா­தா­ரப் பொருள்­கள் பொதுச் சுகா­தா­ரத்­திற்­கும் பாது­காப்­புக்­கும் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டும் என்­ப­தால் மக்­கள் அவற்­றைத் தவிர்க்க வேண்­டும் என்று ஆணை­யம் அறி­வு­றுத்­தி­யது.