சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் முதலாவது 'மங்கா' நூலகம்

சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் முதலாவது 'மங்கா' நூலகம்

2 mins read
fe5db505-1489-4d58-bd56-803db793331a
-

ரச்­சனா வேலா­யு­தம்

'மங்கா' நாவல்­களை கொண்ட முதலாவது முழு சுய சேவை நூலகம் நேற்று சிட்டி ஸ்கு­வேர் கடைத்­தொ­கு­தி­யின் நான்­கா­வது மாடி­யில் திறக்­கப்­பட்­டது.

தேசிய நூலக வாரி­யம் இந்த நூல­கத்­தில் 5,000 'மங்கா' ஜப்­பா­னிய உயிரோவிய நூல்­கள், கேலிச் சித்திர நாவல்­களை காட்சிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவற்­றில் சில சிங்­கப்­பூர் கேலிச் சித்திர நாவல்­களும் உள்­ளன. இவற்­றில் 1,000 நூல்­கள் ஜப்­பா­னிய பதிப்­பக நிறு­வ­னத்­தால் நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளன.

தேசிய நூலக வாரி­யத்­தின் 'கிராப்-என்-கோ' என்ற சுய­மாக இர­வல் பெறும் சேவை இந்த நூல­கத்­தில் வழங்­கப்­ப­டு­கிறது. ஒரே நேரத்­தில் எட்டு நூல்­கள் வரை இர­வல் பெற­லாம்.

'மிஸ்­டர் கியாசு' என்ற இயந்­திர மனி­தர், மங்கா நூல்­களை பரிந்­து­ரைப்­ப­தோடு, கிராப்-என்-கோ சேவை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான அடிப்­படை வழி­மு­றை­க­ளை­யும் வழங்கு­கிறது.

உள்­ளூர் சமூக இயந்­தி­ர­வி­யல் நிறு­வ­ன­மான 'டெக்ஸ்-லேப்'புடன் சேர்ந்து தேசிய நூலக வாரி­யத்­து­டன் அந்த இயந்­திர மனி­தரைத் தயா­ரித்­துள்­ளது.

தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்­மொ­ழி சேவை­கள் பிரி­வின் தலை­வர் அழ­கிய பாண்­டி­யன், "இது­போன்ற தனித்து இயங்­கும் நூல­கங்­களை தீவு முழு­வ­தும் அறி­மு­கப்­ப­டுத்­து­வது எங்­க­ளு­டைய நீண்­ட­கா­லத் திட்­டம். பல்­வேறு கலா­சா­ரம் அடங்­கிய இலக்­கி­யத்தை மையப்­ப­டுத்­தும் சிறிய நூல­கங்­களை எதிர்­கா­லத்­தில் எதிர்­பார்க்­க­லாம்," என்று கூறி­னார்.

மங்கா நாவல்­கள், ஜப்­பா­னிய கேலிச் சித்திர நூல்­கள் மற்­றும் உயிரோவிய நாவல்­க­ளின் ஒரு பாணி ஆகும். சிறு­வர் முதல் பெரி­யோர் வரை இவற்­றைப் படித்து மகி­ழ­லாம்.

மங்கா நூல் வலது புறத்­தி­ல் இருந்து இட­மாக வாசிக்­கப்­ப­டு­கிறது.

ஜப்­பா­னில் பல ஆண்­டு­களாக வாசிக்­கப்­பட்டு வரும் இந்த வகை நூல், சிங்­கப்­பூ­ரி­லும் பிர­ப­ல­மாகி உள்­ளது.