உள்ளூர் காற்பந்துச் சங்கங்களிடம் காவல்துறை விசாரணை முடிவில் நால்வர் மீது குற்றச்சாட்டு

உள்ளூர் காற்பந்துச் சங்கங்களிடம் காவல்துறை விசாரணை முடிவில் நால்வர் மீது குற்றச்சாட்டு

2 mins read
4f670115-2070-40d4-a3a6-710a2415351c
-

2017ல் சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கத்­தின் முதல் தேர்­தலை முன்­னிட்டு, காவல்­துறை விசா­ர­ணைக்கு இடை­யூறு விளை­வித்­த­தா­க­வும் உள்­ளூர் காற்­பந்­துச் சங்­கங்­க­ளான ஹவ்­காங் யுனை­டெட், உட்­லண்ட்ஸ் வெலிங்­டனின் அறிக்­கை­க­ளைப் பொய் கையொப்­ப­மிட்­ட­தா­க­வும் அரசு நீதி­மன்­றத்­தில் நேற்று நால்­வர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

கேரி டான், சங் கியன் பெங், காவ் லாய் ஃபோங், லாவ் சீ யூங் ஆகி­யோர் அந்த நால்­வர்.

ஸ்போர்ட் எஸ்ஜி அமைப்பு காவல்­து­றை­யி­டம் அளித்­தி­ருந்த புகா­ரின் தொடர்­பில், கிட்­டத்­தட்ட ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு வர்த்­தக விவ­கா­ரப் பிரிவு அதன் விசா­ர­ணையை நிறைவு செய்­தி­ருப்­பதை காவல்­துறை நேற்று உறு­திப்­ப­டுத்­தி­யது.

தியோங் பாரு காற்­பந்­துச் சங்­கம் நிதியை முறை­கே­டாக பயன்­படுத்­தி­யது, 2017ல் எஸ்-லீக்­கில் பங்­கு­பெ­றாத காற்­பந்­துச் சங்­கங்­க­ளின் கணக்­குத் தணிக்­கை­க­ளுக்கு இடை­யூறு செய்ய முயற்சி செய்­தது உள்­ளிட்ட பல அம்­சங்­கள் குறித்து ஸ்போர்ட் எஸ்ஜி புகார் அளித்­தி­ருந்­தது.

விசா­ர­ணை­யின் முடி­வில் தெரி­ய­வந்த உண்­மை­க­ளை­யும் சூழ்­நி­லை­க­ளை­யும் கவ­ன­மாக பரி­சீ­லித்த பிற­கும் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­லகத்துடன் ஏற்பட்ட இணக்­கத்­திற்­குப் பிற­கும், மற்ற விவ­கா­ரங்­கள் குறித்து காவல்­து­றை­யி­டம் அளிக்­கப்­பட்ட புகா­ரின் தொடர்­பில் மற்ற தனி­நபர்­க­ளுக்கு எதி­ராக இனி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது என்­பதைக் காவல்­துறை உறு­திப்­ப­டுத்­தி­யது.

சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கத்­தின் முன்­னாள் தலை­வர் ஸைனு­டின் நோர்­டின், சங்­கத்­தின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் வின்ஸ்­டன் லீ, ஹவ்­காங் யுனை­டெட் மற்­றும் தியோங் பாரு காற்­பந்­துச் சங்­கங்­க­ளின் தலை­வர் பில் இங், அவ­ரு­டைய மனைவி திரு­வாட்டி போனி வோங் உள்­ளிட்­டோர் அந்த தனி­ந­பர்­களில் அடங்­கு­வர். இந்த நால்­வ­ரும் கைது செய்­யப்­பட்டு, வர்த்­தக விவ­கா­ரப் பிரி­வின் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக முன்­ன­தாக செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

திரு ஸைனு­டின், திரு லீக்கு எதி­ராக கூடு­தல் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டாம் என வர்த்­தக விவ­கா­ரப் பிரி­வி­டம் தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­லகம் உத்த­ர­விட்­டி­ருந்­த­தாக அதன் பேச்­சா­ளர் 2021ல் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­யி­ருந்­தார்.