2022ல் 5,000க்கும் மேற்பட்ட மின்சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்

2022ல் 5,000க்கும் மேற்பட்ட மின்சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்

2 mins read
4eaf54eb-6a6e-4828-afbf-3806eb278626
-

மின்­சைக்­கிள்­களை நடை­பா­தை­களில் ஓட்­டி­ய­தற்­காக கடந்த ஆண்டு 5,000க்கும் மேற்­பட்ட மின்­சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அறிவுறுத்தல் கடிதங்களை வழங்­கி­யது.

பாத­சா­ரி­கள், ஓட்­டு­நர்­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்­காக, மோட்­டார் வச­தி­யு­டைய சாத­னங்­கள் நடை­பா­தை­களில் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்டா என்று ஆணை­யம் கூறி­யது.

ஆணை­யத்­தி­டம் உந்து நட­மாட்ட அம­லாக்க அதி­கா­ரி­களும் துணைக் காவல்­துறை அதி­கா­ரி­களும் அடங்­கிய குழு உள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் ஆணை­யம் கூறி­யது. நடை­பா­தை­களில் மின்­சைக்­கிள்­களை ஓட்­டு­வோ­ரைக் கண்­ட­றிய கண்­கா­ணிப்­புக் கரு­வி­களும் பல இடங்­களில் பொருத்­தப்­பட்­டுள்­ளன. மின்­சைக்­கிள்­கள் நடை­பா­தை­களில் செல்­லும் புதிய இடம் அடை­யா­ளம் காணப்­ப­டும்­போது, கண்­கா­ணிப்புக் கரு­வி­கள் அங்கு மாற்­றப்­ப­டு­கின்­றன.

"அனைத்­துப் பய­னா­ளர்­க­ளின் பாது­காப்­புக்­கும் ஆணை­யம் முன்­னு­ரிமை அளிக்­கிறது. குறிப்­பாக, பாத­சா­ரி­களே எளி­தில் பாதிப்­படை­யக்­கூ­டிய பிரி­வி­ன­ராக உள்­ள­னர். இதைப் புரிந்­து­கொண்டு, மின்­சைக்­கி­ளோட்­டி­கள் விதி­முறை­க­ளுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்­வர் என நம்­பு­கி­றோம். என்­றா­லும், தவ­றி­ழைப்­போ­ருக்கு எதி­ராக அம­லாக்க நட­வ­டிக்­கையை எடுக்­க­வும் நாங்­கள் தயா­ராக உள்­ளோம்," என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த உணவு விநி­யோ­கச் சேவை நிறு­வ­னங்­களான கிராப்­பும் டெலி­வ­ரூ­வும், ஆபத்­தான முறை­யில் உந்து நட­மாட்­டச் சாத­னங்­களை ஓட்­டு­வ­தற்கு எதி­ரான தங்­கள் நிலைப்­பாட்டை மறு­வு­று­திப்­ப­டுத்­தின. பாது­காப்பு விதி­மு­றை­கள் குறித்து உணவு விநி­யோக ஓட்­டு­நர்­களுக்கு நினை­வு­ப­டுத்­து­வதை தாங்­கள் உறு­தி­செய்­வ­தாக இரு நிறு­வ­னங்­கள் கூறின.

நடை­பா­தை­களில் ஓட்­டி­ய­தற்­காக முதன்­மு­றை­யாக பிடி­படும் மின்­சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு $2,000 வரை அப­ரா­தம், மூன்று மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு $5,000 வரை அப­ரா­தம், ஆறு மாதங்­கள் வரை சிறை, அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.