மசே நிதி சம்பள உச்சவரம்பு அதிகரிப்புக்கு வரவேற்பு

3 mins read
dedd90e4-4288-48d7-b64c-96c28e258c62
-

வருடாந்திர சம்பள வரம்பையும் உயர்த்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கோரிக்கை

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தில் பங்­கேற்ற உறுப்­பி­னர்­களில் பெரும்­பா­லா­னோர் ஓய்­வுக்­கா­லத்­தில் போது­மான சேமிப்பு இருப்­பது தொடர்­பான கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்கொண்­ட­னர்.

உய­ரும் சம்­ப­ளத்­திற்கு ஏற்ப மாதாந்­திர மத்­திய சேம நிதி சம்­பள உச்­ச­வ­ரம்பு $6,000 என்­னும் தற்­போ­தைய அள­வி­லி­ருந்­தும் 2026ஆம் ஆண்­டில் $8,000ஆக உயர்த்­தும் திட்டம் தொடர்­பாக அவர்­கள் பேசி­னர்.

நடுத்­தர வரு­மா­னம் உடைய சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது ஓய்­வுக்­ கா­லத்­தில் அதி­கம் சேமிக்க உத­வு­வது அந்தத் திட்டம்.

ஓய்­வுக்­கால சேமிப்பை உயர்த்த வேண்­டிய அவ­சி­யம் தொடர்­பில் மன்ற உறுப்­பி­னர்­

க­ளி­டையே கருத்­தொற்­றுமை காணப்­பட்­டது.

இருப்­பி­னும், மாதாந்­திர சம்­பள உச்­ச­வ­ரம்பை மாற்­று­வது சரி­யான நட­வ­டிக்கை என்­ப­தில் சில உறுப்­பி­னர்­கள் மாற்­றுக் கருத்து கொண்­டி­ருந்­த­னர்.

மாதாந்­திர சம்­பள உச்­ச

­வ­ரம்பை உயர்த்­தும் நட­வ­டிக்­கையை வர­வேற்­றுப் பேசிய பாட்­டா­ளிக் கட்­சி­யின் செங்­காங் குழுத் தொகுதி உறுப்­பி­னர் லூயிஸ் சுவா, வரு­டாந்­திர சம்பள உச்­ச­வ­ரம்­பை­யும் உயர்த்த வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

"தற்­போ­தைய வரு­டாந்­திர சம்­பள உச்­ச­வ­ரம்பு $102,000 ஆக உள்­ளது.

"இதனை உயர்த்­தி­னால் சில ஊழி­யர்­க­ளுக்கு அதி­க­மான பங்­க­ளிப்­பு­கள் கிடைக்­கும். அதன்­மூ­லம் பரந்த ஊழி­யர் குழு பல­ன­டை­யும் சாத்­தி­யம் உள்­ளது," என்­றார் அவர்.

வரு­டாந்­திர சம்­பள உச்­ச­

வ­ரம்பை உயர்த்­து­வ­தன் தொடர்­பில் அவ்­வப்­போது மறு­ஆய்வு செய்­யப்­படும் என்ற அர­சாங்­கம் தெரி­வித்­தி­ருந்­தா­லும் இது தொடர்­பான மாற்­றம் சரி­யாக எப்­போது இடம்­பெ­றும் என்­

ப­தைத் தெரி­விக்­கு­மாறு திரு சுவா கோரி­னார்.

மேலும், உச்­ச­வ­ரம்பு மாற்­றத்­தால் பாதிக்­கப்­ப­டு­வோர் அதிக அழுத்­தங்­களை எதிர்­நோக்­கும் நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் குறிப்­பாக, அதிக மசே நிதி பங்­க­ளிப்பு கார­ண­மாக குறை­வான நிகர மாதச் சம்­ப­ளம் பெறக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு இது சவா­லாக விளங்­கக்­கூ­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்­பி­ன­ரான ஜெசிக்கா டானும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­ப் பேசினார்.

மசே நிதி பங்­க­ளிப்புக்காக அதிகம் கழித்­தது போக கிடைக்­கக்கூ­டிய குறைவான மாதச் சம்­ப­ளம் பெறும் ஒரு குடி­யி­ருப்­

பா­ளரை அதற்கு அவர் உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார்.

"பண­வீக்­க­மும் அது தொடர்­பான அழுத்­த­மும் அதி­க­ரிக்­கும் நிலை­யில், ஊழி­யர்­கள் தங்­க­ளது ஓய்­வுக்­கால சேமிப்பு அதி­க­ரிப்பு மூலம் பல­ன­டை­வர் என்­ற­போ­தி­லும் மாதாந்­திர செல­வு­க­ளுக்கு குறை­வான பணமே அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் என்­ப­தை­யும் நாம் ஒப்­புக்­கொள்ள வேண்­டும் என எனது தொகுதி குடி­யி­ருப்­பா­ளர் கருத்து தெரி­வித்­தார்," என்­றார் திரு­வாட்டி டான்.

பீஷான்-தோ பாயோ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் சக்­தி­யாண்டி சுப்பாட் கூறு­கை­யில், புதிய அணுகுமுறை $6,000க்கு மேல் மாதாந்­திர சம்­ப­ளம் பெறக்­கூ­டிய ஊழி­யர்­களை இலக்­

கா­கக் கொண்­டி­ருப்­பதுபோலத் தோன்­று­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இந்­தப் பிரி­வி­னருக்கு போதுமான ஓய்வுக்கால சேமிப்பு இருக்காது என்று அர­சாங்­கம் கரு­து­கி­றதா என்­றும் அவர் வின­வி­னார். மாதாந்­திர சம்­பள உச்­ச­ வ­ரம்பு மாற்­றம் கார­ண­மாக முத­லா­ளி­க­ளின் மசே நிதி பங்­

க­ளிப்பு அதி­க­ரிக்­கும்போது சிறிய நிறு­வ­னங்­கள் அதிக நிதி அழுத்தத்திற்கு ஆளா­கக்­கூ­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

பண­வீக்க அதி­க­ரிப்பு என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாக விளங்­கும் வேளை­யில் அதற்கு இணை­யாக மசே நிதி சேமிப்­புக்­கான வட்டி விகி­தம் ஏன் உயர்த்­தப்­ப­ட­வில்லை என சிலர் கேட்­ப­தாக திரு சக்­தி­யாண்டி கூறி­னார்.

இந்த ஆண்­டுக்­கான சிங்­கப்­பூ­ரின் மூலா­தாரப் பண­வீக்­கம் சரா­ச­ரி­யாக 3.5 விழுக்­காட்­டுக்­கும் 4.5 விழுக்­காட்­டுக்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என்று கணிக்­கப்­பட்டுள்­ளது.