கொவிட்-19 கிருமிப் பரவலால் தடைபட்ட கொள்கலன் சந்தை, திருவிழாவான 'ஆர்ட்பாக்ஸ் சிங்கப்பூர்', மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறவிருக்கிறது. உள்ளூர் நகைச்சுவைத் தளமான எஸ்ஜிஏஜி உடன் கைகோத்து இம்முறை உள்ளரங்கில் இது நடைபெறும். சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கு எண் 6ல் இம்மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளிலும் அடுத்த மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளிலும் இது இடம்பெறும். இதில் கிட்டத்தட்ட 20 கொள்கலன்கள் உணவு, சில்லறை விற்பனைக் கடைகளாக உருமாறி சேவை அளிக்கும். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தைவான் ஆகியவற்றில் இருந்து 300க்கு மேற்பட்ட விற்பனையாளர்கள் கடைவிரிப்பர். பார்வையாளர்களை ஈர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 'ஆர்ட்பாக்ஸ் சிங்கப்பூர்'
1 mins read
-

