'சிங்கப்பூர் ஓ அண்ட் ஜி' எனும் மகளிர், சிறார் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் முன்னாள் இயக்குநர் 64 வயது கிறிஸ்டஃபர் சோங் மெங் டக்.
இந்தக் குழுமம் 2015ஆம் ஆண்டுவாக்கில் சில நிறுவனங்களை வாங்கியதன் தொடர்பில் $1.5 மில்லியன் 'ஆலோசனைக் கட்டணம்' பெற்றதை சோங் வெளியிடத் தவறினார்.
அவர்மீது, ஏமாற்றியது தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இரண்டின் தொடர்பிலும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
குழுமத்தில் பணியாற்றச் சேரும் ஒவ்வொரு மருத்துவருக்கும் சோங்கிற்கு குறிப்பிட்ட தொகை தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சோங் $100,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வரும் மே மாதம் 17ஆம் தேதி அவருக்கு இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

