முன்னாள் துணைப்பாட ஆசிரியருக்கு கடும் எச்சரிக்கை

முன்னாள் துணைப்பாட ஆசிரியருக்கு கடும் எச்சரிக்கை

2 mins read
2b9e5e73-eb59-4e66-8832-40cda6f4f6fe
-

தேசிய அள­வி­லான தேர்­வில் ஏமாற்று நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்ட துணைப்­பாட ஆசி­ரி­ய­ருக்கு, இவ்­வ­ழக்கு தொடர்­பான இறுதிக் குற்­றச்­சாட்­டில் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நீதி­மன்­றச் செயல்­பாட்­டுக்கு இடை­யூறு விளை­வித்­தது தொடர்­பான குற்­றச்­சாட்டு அது.

அதன் பிறகு சென்ற வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற விசா­ர­ணைக்கு முந்­தைய கலந்­து­ரை­யா­ட­லில் திரு­வாட்டி ஃபியோனா போ மின் (படம்) இக்­குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

தெம்­ப­னி­சில் செயல்­பட்ட ஸீயஸ் எடு­கே­ஷன் சென்­டர் எனும் துணைப்­பாட நிலை­யத்­தில் ஃபியோனா பணி­பு­ரிந்­தார்.

நிலை­யத்தை அவ­ரது உற­வி­ன­ரான திரு­வாட்டி போ யுவான் நீ நடத்தி வந்­தார்.

2016ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுக் கல்­விச் சான்­றி­த­ழுக்­கான சாதா­ரண நிலைத் தேர்­வு­கள் மூன்­றில், ஏமாற்­றுச் செயல்­களில் ஈடு­பட ஆறு மாண­வர்­களுக்கு இரு பெண்­களும் உதவி செய்­த­னர்.

சீனாவைச் சேர்ந்த மாண­வர்­கள் தேர்ச்சி பெற்று உள்­ளூர் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் சேர உதவும் பொருட்டு இரு­வ­ரும் இவ்­வாறு குறுக்­கு­வழியை நாடி­னர். இதன் தொடர்­பில் இருவர்மீதும் ஆளுக்கு 27 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

ஃபியோனா­வுக்கு 2020ஆம் ஆண்டு இவ்வழக்கில் மூன்று ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அதை அவர் நிறை­வேற்றி வரு­கி­றார்.

முன்னதாக 2016ஆம் ஆண்­டில், நீதி­மன்ற நட­வ­டிக்­கை­யைத் தவிர்க்­கும் நோக்­கில் ஏமாற்று வழக்­கில் தொடர்­பு­டைய ஒரு மாண­வரை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யே­றும்­படி ஃபியோனா ஆலோ­சனை கூறி­யி­ருந்­தார்.

அதன்­வழி நீதி­மன்ற நட­வடிக்­கைக்கு இடை­யூறு விளை­வித்­த­தாக அவர்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

தற்­போது அதி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­து­டன் மீண்­டும் இதன் தொடர்­பில் ஃபியோனா­மீது இதே குற்­றச்­சாட்டை சுமத்­த­ இய­லாது என நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.