புற்றுநோய் மருந்துப் பட்டியலில் இடம்பெறாத சிகிச்சைகள்: நோயாளிகளுக்குக் கூடுதல் தெரிவுகள்

புற்றுநோய் மருந்துப் பட்டியலில் இடம்பெறாத சிகிச்சைகள்: நோயாளிகளுக்குக் கூடுதல் தெரிவுகள்

2 mins read
2d877526-64f9-4c31-a298-8700085aa73e
-

புற்­று­நோய் சிகிச்­சை­க­ளுக்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட காப்­பு­று­தித் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி கட்­ட­ணம் செலுத்­து­வது குறித்து மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த மாற்­றங்­கள் வரும் ஏப்­ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தனி­யார் துறைக்­கும் பொருந்­தும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் 1லிருந்து புற்­று­நோய் மருந்­துப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் சிகிச்­சை­க­ளுக்கு மட்­டுமே ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட காப்­பு­று­தித் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஆனால் ஏற்­கெ­னவே இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றாத சிகிச்­சை­யைத் தொடங்­கி­விட்­ட­வர்­கள் கூடு­த­லாக ஆறு மாதங்­க­ளுக்கு (செப்­டம்­பர் 30) வரை ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட காப்­பு­று­தித் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம்.

செப்­டம்­பர் 30ஆம் தேதிக்­குப் பிறகு இந்த நோயா­ளி­க­ளுக்கு உதவி செய்­யும் வகை­யில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் (பாட்­டா­ளிக் கட்சி) லுயிஸ் சுவா கேள்வி எழுப்­பி­னார். இதற்கு நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று எழுத்துபூர்வமாகப் பதி­ல­ளித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், புற்­று­நோய் நோயா­ளி­க­ளுக்­கான சிகிச்­சை­க­ளின் வழக்­க­மான கால அளவை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

பட்­டி­ய­லில் இடம்­பெ­றாத சிகிச்சை முறை­யைப் பெறும் பெரும்­பா­லான நோயா­ளி­க­ளின் சிகிச்சை செம்­டம்­பர் மாதத்­துக்­குள் நிறை­வ­டைந்­து­வி­டும் என்று அமைச்­சர் ஓங் கூறி­னார்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறும் பத்­தில் ஒரு புற்­று­நோயாளிப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றாத சிகிச்­சை­யைப் பெற்­றுக்­கொள்­கிறார்.

செப்­டம்­பர் மாதத்­துக்­குள் சிகிச்சை நிறை­வ­டை­யா­விட்­டால் இந்­நோ­யா­ளி­க­ளுக்கு மாற்று தெரி­வு­கள் உண்டு என்று அமைச்­சர் ஓங் கூறி­னார்.

அவர்­கள் உட்­கொள்­ளும் மருந்­து­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற சிகிச்­சைப் பட்­டி­யல் விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்றார் அவர். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளி­யி­டப்­பட்ட இப்­பட்­டி­ய­லில் முத­லில் 270 சிகிச்­சை­கள் இடம்­பெற்­றன. தற்­போது பட்­டி­ய­லில் 340 சிகிச்­சை­கள் இடம்­பெ­று­கின்­றன.

பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் சிகிச்­சை­மு­றைக்­கும் நோயா­ளி­கள் மாற­லாம் என்று திரு ஓங் கூறி­னார். கடு­மை­யான நோய்­க­ளுக்­கான காப்­பு­று­தித் திட்­டம் அல்­லது ரைடர்ஸ் திட்­டம் மூலம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட காப்­பு­று­தித் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­த­லாம். பட்­டி­ய­லில் இடம்­பெ­றாத சிகிச்சை தேவைப்­பட்டு, ஆனால் அதற்­கான மருத்­து­வக் கட்­ட­ணத்­தைச் செலுத்த சிர­மப்­ப­டு­வோர் மானி­யம் வழங்­கப்­படும் சிகிச்­சை­யைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம் அல்­லது மெடி­ஃபண்ட் ஆத­ர­வுக்கு விண்­ணப்­பம் செய்­ய­லாம்.