சாக்கடை வாயிற்புழைக்குள் வெடிப்புச் சத்தங்கள்; பீஷானில் குடியிருப்பாளர்கள் 30 பேர் வெளியேற்றம்

சாக்கடை வாயிற்புழைக்குள் வெடிப்புச் சத்தங்கள்; பீஷானில் குடியிருப்பாளர்கள் 30 பேர் வெளியேற்றம்

1 mins read
a13398ec-8088-4f11-98fa-e71d1af8187b
-

பீஷா­னில் உள்ள சாக்­கடை வாயிற்புழைக்­குள் வெடிப்­புச் சத்­தங்­கள் கேட்­ப­தா­கப் புகார் செய்­யப்­பட்­டதை அடுத்து, அவ்­வட்­டா­ரத்­தில் வசிக்­கும் ஏறத்­தாழ 30 பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று காலை நிகழ்ந்­தது.

காலை 11.20 மணி அள­வில் பீஷான் ஸ்தி­ரீட் 21க்கு அரு­கில் உள்ள 34 கின்­சாங் ரைசி­லி­ருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

சம்­பவ இடத்­துக்கு விரைந்த அதி­கா­ரி­கள் வெப்ப உணர் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி சம்­பந்­தப்­பட்ட சாக்­கடை வாயிற்புழை­யைச் சோத­னை­யிட்­ட­னர்.

அதி­லி­ருந்து வழக்­கத்­துக்கு மாறாக அதிக வெப்­பம் வெளிப்­

ப­டு­வது தெரி­ய­வந்­தது.

அச்சோ­தனை நடத்­தப்­பட்­ட­போது சாக்­கடை வாயிற்புழைக்­குள் தீப்­பற்றி எரி­ய­வில்லை என்­ற­போ­தி­லும் அதற்­குள் இருந்த மின்­வ­டங்­க­ளின் மின்­காப்­பு­கள் தீயில் சற்று கரு­கி­யி­ருந்­த­தைக் காண முடிந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். இந்த மின்­வ­டங்­கள் தொலைத்­தொ­டர்பு இணைப்­புக்­காக அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

வெப்பத்தைத் தணிக்க சாக்கடை வாயிற்புழைக்குள் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

தீங்கு, அபா­யம் விளை­விக்­கக்­கூ­டிய பொருள்­கள் அதற்­குள் இருக்­கி­றதா என்­பதை கண்­ட­றிய சோதனை நடத்­தப்­பட்­டது. சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.