சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஸ்கூட், சீனாவுக்குக் கூடுதல் விமானச் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு வாரத்துக்கு 14 விமானச் சேவைகளை ஸ்கூட் வழங்குகிறது. இந்த எண்ணிக்கையை வரும் ஜூன் மாதத்துக்குள் 57ஆக உயர்த்த அது இலக்கு கொண்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு வாரத்துக்கு 107 ஸ்கூட் விமானங்கள் சிங்கப்பூரிலிருந்து சீனா சென்றன.

