வாகனப் பதிவு எண்ணை மாற்றியவருக்கு அபராதம்

வாகனப் பதிவு எண்ணை மாற்றியவருக்கு அபராதம்

2 mins read
5d248d0a-224e-4bb3-8d54-dd5424f66246
-

ரெட் சுவஸ்திகா பள்ளி பாதுகாவல் அதிகாரியை வாகனமோட்டி மிரட்டிய சம்பவம்

'ரெட் சுவஸ்­திகா' பள்­ளி­யில் பாது­கா­வல் அதி­கா­ரி­மேல் காரை மோதப்­போ­வ­தாக மிரட்­டல் விடுத்த 61 வயது முதி­ய­வ­ரின் மகன், தந்தை ஓட்­டிய 'பென்ட்லி' காரின் வாக­னப் பதி­வெண் பல­கையை மாற்­றி­னார்.

இதன் தொடர்­பில் அந்த 28 வயது ஆட­வ­ருக்கு நேற்று $2,600 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அத்­து­டன் 12 மாதங்­கள் வாக­னம் ஓட்­டு­வ­தற்­கும் அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கிளின் நியோ ஜியா, வேறொரு காரின் வாக­னப் பதி­வெண் பல­கையை எடுத்து 'பென்ட்லி' சொகு­சுக் காரில் பொருத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

முறை­யான காப்­பீடு இன்­றித் தனது தந்தை அந்­தக் காரை ஓட்­டு­வ­தற்கு அனு­ம­தித்­த­தன் தொடர்­பில் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

முன்­ன­தாக, சென்ற ஆண்டு ஜன­வ­ரி­யில் அவ­ரது தந்தை நியோ ஹோங் சை, தனது பேத்­தி­யைப் பள்­ளி­யில் விட அந்­தக் காரை ஓட்­டிச் சென்­றார்.

பள்­ளிக்­குள் வாக­னத்தை அனு­ம­திக்க மறுத்­தார் அப்­போது பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த 62 வயது பாது­கா­வல் அதி­காரி.

ஆனால் நியோ, காரை அவர்­மேல் மோதப்போவதாக மிரட்டியதுடன் மோதுவ­தைப்­போல் முன்னே செலுத்­தி­ய­தா­கவும் கூறப்­பட்­டது.

அலட்­சி­ய­மாக வாக­ன­மோட்டி யதன் தொடர்­பில் சென்ற அக்­டோ­பர் மாதம் முதி­ய­வர் நியோ­விற்கு எட்டு வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முறை­யான காப்­பீடு பெறா­மல் அந்த காரை ஓட்­டி­ய­தற்­காக $600 அப­ரா­த­மும் 12 மாதங்­க­ளுக்கு வாக­னம் ஓட்­டத் தடை­யும் விதிக்­கப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­யில், 'பென்ட்லி' காரின் வாக­னப் பதி­வெண் பலகை 2021 மே மாதம் பதிவு நீக்­கம் செய்­யப்­பட்ட 'பிஎம்­ட­பிள்யூ' காருக்­குச் சொந்­த­மா­னது என்று தெரி­ய­வந்­தது.

அதை 'பென்ட்லி' காருக்கு மாற்­று­வது தொடர்­பில் விண்­ணப்­பம் ஏதும் செய்­யப்­ப­ட­வில்லை என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் சார்­பாக வாதிட்ட வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

கார் வாங்கி, விற்­கும் 'நியோ டைம்ஸ்' எனும் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மா­னது அந்த 'பென்ட்லி' கார். கிளின் நியோ டிசம்­பர் 2021ல் அந்­தக் காரை வாங்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பின்­னர், புகைப்­ப­டம் எடுப்­ப­தற்­காக அதன் வாக­னப் பதி­வெண் பல­கையை மாற்­றி­யி­ருந்­தார்.

வீட்­டில் இருந்த அந்­தக் காரின் சாவியை எடுத்த முதி­ய­வர் நியோ, பேத்­தி­யைப் பள்­ளிக்கு அழைத்­துச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

தந்தை காரை ஓட்­டிச் சென்­றது மக­னுக்­குத் தெரி­யாது என்­றும் தெரிந்­தி­ருந்­தால் அவர் அதற்கு ஒப்­புக்­கொண்­டி­ருக்­க­மாட்­டார் என்­றும் நியோ­வின் வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

யாரை­யும் ஏமாற்­றும் நோக்­கில் அவர் வாக­னப் பதி­வெண் பல­கையை மாற்­ற­வில்லை.

காரை விற்­ப­தற்­கா­கப் புகைப்­படம் எடுக்­கும் நோக்­கில் அவர் அவ்­வாறு செய்­தார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

வேறொரு காரின் வாக­னப் பதி­வெண்ணை 'பென்ட்லி' காரில் பொருத்­திய குற்­றத்­துக்கு அவ­ருக்கு ஐயா­யி­ரம் வெள்ளி வரை­யி­லான அப­ரா­தமோ 12 மாதங்­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­பட்டிருக்கலாம்.

முறை­யான காப்­பீடு பெறப்­படாத வாக­னத்தை ஓட்ட அனு­மதித்த குற்­றத்­துக்கு மூன்று மாதங்­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ $1,000 அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.