தாயைத் தாக்கிய தனயனுக்கு சீர்திருத்தப் பயிற்சி உத்தரவு

தாயைத் தாக்கிய தனயனுக்கு சீர்திருத்தப் பயிற்சி உத்தரவு

1 mins read
169c6575-14c3-4d1b-b773-069b8b4cc6d1
-

நேதன் சுபாஷ் எனும் 19 வயது இளை­ய­ருக்கு சீர்­தி­ருத்­தப் பயிற்சி மேற்­கொள்­ளும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் தனது தாயா­ரைத் தாக்­கிய இவர் நவம்­ப­ரில் அவ­ரது குடலை உருவப்போ­வ­தாக மிரட்­டி­னார் என்று கூறப்­பட்­டது.

தாக்­கு­தல், துன்­பு­றுத்­தல் ஆகி­யவை தொடர்­பில் நேதன்­மீது இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. 2022 டிசம்­பர் மாதத்­தில் அவற்றை ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து நேற்று அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சென்ற ஆண்டு அக்­டோ­பர் 24ஆம் தேதி மாலை 5 மணி­ய­ள­வில், செங்­காங்­கில் உள்ள இவர்­க­ளது வீட்­டில், தாயார்­மீது மெல்­லி­ழைத்­தாள் பெட்­டியை நேதன் வீசி­னார். ஊசி­போன்ற கரு­வி­யால் பல­முறை குத்­தி­னார்.

பாது­காப்­புக் கோரி தாயார் விண்­ணப்­பித்­த­தால், அதற்­கேற்ப உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் சில நாள் கழித்து, தாயா­ரி­டம் சண்­டை­யிட்ட நேதன் அவ­ரைக் கொன்­று­வி­டப் போவ­தாக மிரட்­டி­னார். 2022 நவம்­பர் 9ஆம் தேதி பல­வா­றா­கத் திட்­டி­ய­போது குடலை உரு­வி­வி­டு­வேன் என்று மிரட்­டி­னார்.

அதே­நாள் மாலை­யில் காவல்­து­றை­யி­னர் நேத­னைக் கைது செய்­த­னர்.

சீர்­தி­ருத்­தப் பயிற்சி மையத்­தில் அவர் தடுத்து வைக்­கப்­ப­டு­வார். அங்கு கடு­மை­யான உடற்­பயிற்­சி­க­ளு­டன் மன­நல ஆலோ­ச­னை­யும் அவ­ருக்கு வழங்­கப்­படும்.