$182,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஆடவர் கைது

$182,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ஆடவர் கைது

1 mins read
7b9c6500-44ac-43c6-9de9-88ade17f0206
-

போதைப்­பொ­ருள் கடத்­திய சந்­தே­கத்­தின்­பே­ரில் சிங்­கப்­பூ­ர­ரான 32 வயது ஆட­வர் சென்ற செவ்­வாய்க்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவ­ரி­ட­மி­ருந்து ஏறக்­கு­றைய ஐந்து கிலோ­கி­ராம் போதைப்­பொ­ருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. அவற்­றின் மதிப்பு $182,000 எனக் கரு­தப்­ப­டு­கிறது.

இரண்டு கிலோ­கி­ராம் கஞ்சா, 960 கிராம் ஹெரா­யின், 130 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும். மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் நடந்த அம­லாக்க நட­வ­டிக்­கை­யில், புக்­கிட் தீமா ரோட்­டிற்கு அருகே மெர்­சி­டிஸ்-பென்ஸ் காரில் இருந்த அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர் பொங்­கோல் ஃபீல்டு பகு­தி­யில் உள்ள அவ­ரது வீட்­டில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். அங்­கும் போதைப்­பொ­ருள்­கள் சில­வற்­றைப் பறி­மு­தல் செய்­த­னர்.

போதைப்­பொ­ருள் தீங்கு விளை­விக்­கக்­கூ­டி­யது என்று தெரிந்தே கடத்­தல்­கா­ரர்­கள் அவற்றை சிங்­கப்­பூ­ருக்­குள் கொண்­டு­வ­ரு­வ­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது. இத­னால் போதைப்­புழங்­கி­க­ளின் வாழ்­வும் வாழ்­வா­தா­ர­மும் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­வதை அது சுட்­டி­யது.

சமூ­கத்­தில் போதைப்­பொ­ருள் விநி­யோ­கத்­தைத் தடுக்க கடு­மை­யான சட்­டம் நடப்­பில் இருப்­ப­தை­யும் தீவிர அம­லாக்க நட­வடிக்கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தை­யும் அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

சிங்­கப்­பூர் சட்­டத்­தின்­கீழ், 500 கிரா­முக்கு மேற்­பட்ட கஞ்சா அல்­லது 15 கிரா­முக்கு மேற்­பட்ட ஹெரா­யி­னைக் கடத்­தி­ய­வர்­களுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.