சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டத்தில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் இவ்வாண்டும் அறிவிக்கப்பட்ட வரித் திட்டங்கள் இன்றி சிங்கப்பூர் அதன் செலவினத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது என்றும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அரசாங்கம் மிக அதிகமாகப் பெற்றுக்கொண்டு மிகக் குறைவாகத் திருப்பித் தருவதாக வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது சிலர் தெரிவித்த கருத்துகளுக்கு திரு வோங் பதிலளித்தார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா உறுப்பினர் லியோங் மன் வாய், ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் பல பில்லியன் மதிப்பிலான 'மிதமிஞ்சிய வளங்களை' பெற்று வருவதாகக் கூறியிருந்தார்
கொவிட்-19 நோயை எதிர்த்துப் போராட $72 பில்லியன் செலவிடப்பட்டதில் $40 பில்லியன் கடந்த கால நிதிச் சேமிப்பிலிருந்து எடுக்கப்பட்ட நிலையில் எஞ்சிய $32 பில்லியனுக்கு வளங்கள் இருந்ததாக திரு லியோங் ஊகமாகத் தெரிவித்தார்.

