அதிக வரி என்பதில் உண்மையில்லை

அதிக வரி என்பதில் உண்மையில்லை

1 mins read
8cd959e1-e882-4d67-bbca-f5dc25c1570f
-

நடுத்தர வருமான சிங்கப்பூரர் களிடம் அதிக வரி வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுவதை திரு வோங் மறுத்தார்.

உலகெங்குமுள்ள குடிமக்களோடு ஒப்பிடுகை யில் சிங்கப்பூரர்கள் மிகக் குறைவான வரி செலுத்து வதாகவும் அதேநேரம் உயர் தரத்திலான பொதுச் சேவை களை அவர்கள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரி வித்தார். வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது நடுத்தர வருமானம் ஈட்டுவோர் மீதான தாக்கம் குறித்து கருத்துகள் எழுப்பப்பட்டன.அவற்றுக்குப் பதிலளித்த திரு வோங், வருமான வரியுடன் இதர மறைமுக வரி என்று எல்லாவற்றையும் கணக்கிட்டால் நடுத்தர குடும்பங்களின் வரிச்சுமை அவற்றின் வரு மானத்தில் சுமார் 10% என்றார்.

அதேநேரம் வெளிப்படை யாக தகவல்கள் தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ஃபின்லாந்து போன்ற முன்னேறிய நாடுகளில் இதைவிட அதிகமாக வரி செலுத்துகிறார்கள் என்றார் அவர்.