‘சி’ வார்டு கொவிட்-19 நோயாளிகள் ஏப்ரல் முதல் $700 செலுத்தவேண்டி வரலாம்

மருத்­து­வ­ம­னை­க­ளின் ‘சி’ பிரிவு வார்­டில் அனு­ம­திக்­கப்­படும் கொவிட்-19 நோயா­ளி­கள் ஏப்­ரல் 1 முதல் ஏறக்­கு­றைய $700 செலுத்­த­வேண்டி வரும். மருத்­துவ உத­விக் கட்­ட­ணங்­க­ளை­யும் மெடி­ஷீல்ட் லைஃப் சலு­கை­க­ளை­யும் கழித்­த­து­போக இந்­தத் தொகையை அவர்­கள் செலுத்த நேரி­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கொள்­ளை­நோய் தணிந்­து­விட்­ட­தா­லும் கொரோனா கிரு­மி­யு­டன் வாழும் முறை­யு­டன் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­விட்­ட­தா­லும் கொவிட்-19 நோயா­ளி­கள் இந்த அள­வுக்­குக் கட்­ட­ணம் செலுத்­தும் நிலை ஏற்­பட்டுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­களில் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு தற்­போ­தைய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உத­வித் திட்­டங்­களும் மெடி­ஷீல்ட் லைஃப், மெடி­சேவ் மற்­றும் மெடி­ஃபண்ட் திட்­டங்­களும் ஆத­ரவு வழங்­கும். மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணங்­க­ளுக்­கும் சிகிச்­சைக­ளுக்­கும் அவர்­கள் மெடி­சேவ் தொகை­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.

மெடி­சேவ் கணக்­கைப் பயன்­ப­டுத்த இய­லா­த­வர்­க­ளுக்­கும் $700 மருத்­து­வக் கட்­ட­ணத்­தைச் செலுத்த சிர­மப்­ப­டு­வோ­ருக்­கும் மெடி­ஃபண்ட் கைகொ­டுக்­கும் என்று சுகா­தார மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஹ்ஸாம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­படும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கும் இந்த நிதித் திட்­டங்­கள் பொருந்­தும் என்று கூறிய திரு­வாட்டி ரஹாயு, தற்­போது தீவிர சிகிச்­சைப் பிரி­வில் கொவிட்-19 நோயா­ளி­கள் அனும­திக்­கப்­ப­டு­வது அரி­தாகி வரு­கிறது என்­றார்.

மூன்றாண்டு கால கொள்­ளை­நோய்க்­குப் பிறகு, பெரும்­பா­லான கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு இலே­சான அறி­கு­றி­களே தென்ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் அள­வுக்கு நோய் தீவி­ர­ம­டை­வ­தில்லை என்­றும் அவர் கூறி­னார்.

இயோ சூ காங் தனித்­தொ­குதி உறுப்­பி­னர் யிப் ஹான் வெங் எழுப்­பிய வினா­வுக்­குப் பதி­ல­ளித்து அவர் பேசி­னார். கொவிட்-19 நோய்க்கு ஆகக்கூ­டிய செல­வு­கள் பற்­றி­யும் அவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் கூடு­தல் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உத­வி­கள் பற்­றி­யும் திரு யிப் கேட்­டி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரின் நோய்க் குறி­யீட்­டின் நிறம் பச்­சைக்கு மாற்­றப்­ப­டு­வ­தாக பிப்­ர­வரி 9ஆம் தேதி அறி­விக்­கப்­பட்­ட­தால் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கான பரி­சோ­த­னை­க­ளுக்­கும் சிகிச்­சை­க­ளுக்­கும் வழங்­கப்­பட்டு வந்த முழு­மை­யான உத­வி­கள் ஏப்­ரல் முதல் குறைக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 நோய் என்­பது தனித்­துவ வகை­யைச் சேர்ந்த நோயாக இனி இங்கு கரு­தப்­ப­டாது என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் உத­வி­கள் குறைக்­கப்­ப­டு­கின்­றன.

இருப்­பி­னும் தடுப்­பூசி என்­பது முதல்­நிலை தற்­காப்பு என்­ப­தால் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது இல­வ­சம் என்­பது தொட­ரும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரும் மருத்­துவ ரீதி­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இய­லா­தோ­ரும் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெறும்­போது அவர்­க­ளுக்கு முழு­மை­யான மருத்­து­வக் கட்­ட­ணச் சலுகை வழங்­கப்­பட்டு வரு­கிறது.

“ஏப்­ரல் 1 முதல் இதில் மாற்­றம் செய்­யப்­படும். கொவிட்-19 அறி­கு­றி­க­ளு­டன் பல­துறை மருந்­த­கங்­களில் சிகிச்சை நாடு­வோ­ரி­டம், சலு­கை­க­ளைக் கழித்­த­து­போக $20 முதல் $35 வரை கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும். இதர வகை கடு­மை­யான சுவாச நோயா­ளி­க­ளி­டம் வசூ­லிக்­கப்­படும் அதேபோன்ற தொகை இவர்களிடம் வசூ­லிக்­கப்­படும்,” என்றார் திரு­வாட்டி ரஹாயு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!