ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கு $100,000

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு நிதிக்கு $100,000

1 mins read
bde0ad75-a0d0-44a0-aed0-3618a2cb224d
-

குவோக் அற­நி­று­வ­னம் எனப்­படும் கிறிஸ்­துவ அமைப்பு, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்­ளிக் கைச்­செ­லவு நிதிக்கு $100,000 நன்­கொடை வழங்­கி­யது. சென்ற ஆண்டு மத்­தி­யில் தொடங்­கப்­பட்ட அமைப்பு வழங்­கிய முதல் நன்­கொடை இது­வா­கும்.

தமது பெற்­றோ­ரின் கொடை தொட­ரப்­பட வேண்­டும் என்­பது மறைந்த திரு­வாட்டி கெட்­ரூட் குவோக்­கின் கடைசி ஆசை. அதை நிறை­வேற்­றும் வண்­ணம் அற­நி­று­வ­னம் தொடங்­கப்­பட்­டது.

2018ல் இறந்த திரு­வாட்டி குவோப் காலஞ்­சென்ற ஆங்கிலிக்க பாதி­ரி­யார் ரெவ­ரண்ட் குவோக் கோ முவோ­வின் மூத்த மக­ளா­வார். ரெவ­ரண்ட் குவோ, தமது வாழ்­நாளை அறச்­செ­யல்களுக்கு அர்ப்­ப­ணித்­தார்.

திரு­வாட்டி குவோக், சீனப் பெண்­கள் பாலியல் தொழிலில் தள்­ளப்­ப­டு­வ­தைத் தடுத்த, வேலைக்­கான மக­ளிர், சிறு­மி­ க­ளின் காவ­லர் என்று அர­சா­ணை­யில் குறிப்­பி­டப்­பட்ட முதல் உள்­ளூர் பெண் ஆவார். மேலும், சிறு­வர் கொடு­மை­யைத் தடுக்­கும் அர­சாங்க முயற்சி­களில் திரு­வாட்டி குவோக் பங்­காற்றி வந்­தார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்­ளிக் கைச்­செ­லவு நிதி­யின் மூலம், சுமார் 10,000 மாண­வர் கள் பயன்­பெற்று வரு­கின்­ற­னர்.

$690க்குக் குறை­வான மாதாந்­திர குடும்ப வரு­வாய் உள்ள குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளின் கைச்­செ­ல­வுக்கு இந்த நிதியின் மூலம் பணம் வழங்­கப்­பட்டு வரு­கிறது.