குவோக் அறநிறுவனம் எனப்படும் கிறிஸ்துவ அமைப்பு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு $100,000 நன்கொடை வழங்கியது. சென்ற ஆண்டு மத்தியில் தொடங்கப்பட்ட அமைப்பு வழங்கிய முதல் நன்கொடை இதுவாகும்.
தமது பெற்றோரின் கொடை தொடரப்பட வேண்டும் என்பது மறைந்த திருவாட்டி கெட்ரூட் குவோக்கின் கடைசி ஆசை. அதை நிறைவேற்றும் வண்ணம் அறநிறுவனம் தொடங்கப்பட்டது.
2018ல் இறந்த திருவாட்டி குவோப் காலஞ்சென்ற ஆங்கிலிக்க பாதிரியார் ரெவரண்ட் குவோக் கோ முவோவின் மூத்த மகளாவார். ரெவரண்ட் குவோ, தமது வாழ்நாளை அறச்செயல்களுக்கு அர்ப்பணித்தார்.
திருவாட்டி குவோக், சீனப் பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதைத் தடுத்த, வேலைக்கான மகளிர், சிறுமி களின் காவலர் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்ட முதல் உள்ளூர் பெண் ஆவார். மேலும், சிறுவர் கொடுமையைத் தடுக்கும் அரசாங்க முயற்சிகளில் திருவாட்டி குவோக் பங்காற்றி வந்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் மூலம், சுமார் 10,000 மாணவர் கள் பயன்பெற்று வருகின்றனர்.
$690க்குக் குறைவான மாதாந்திர குடும்ப வருவாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கைச்செலவுக்கு இந்த நிதியின் மூலம் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

