பிடோக்கில் உரிமம் இன்றி மெல்லிழைத் தாள் விற்றவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள்

பிடோக்கில் உரிமம் இன்றி மெல்லிழைத் தாள் விற்றவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள்

1 mins read
c7477eaf-f390-46e0-908c-2326eb00509f
-

பிடோக் பேருந்து நிலை­யம் அருகே உரி­மமின்றி மெல்­லி­ழைத் தாள் விற்­ற­வர்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை கடி­தங்­களை விடுத்­துள்­ள­னர்.

மெல்­லி­ழைத் தாள் விற்­ற­வர்­களில் சிலர் ஒன்­றாக வேனில் வந்­து­போ­ன­தைப் பார்த்­த­தாக பிடோக் வாசி­கள் சிலர் தம்­மி­டம் கூறி­னர் என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்­ற உறுப்­பி­னர் டான் கியட் ஹாவ் நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார். அவர்­க­ளுக்குப் போது­மான உதவி கிடைக்­கி­றதா என்று சில குடி­யி­ருப்­பா­ளர்­கள் கவலை தெரி­வித்­த­னர் என்­றார் திரு டான்.

பிடோக் எம்­ஆர்டி நிலை­யம் அருகே மெல்­லி­ழைத் தாள் விற்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தா­க­வும் ஒரு­வர் "பிச்சை எடுத்­த­தா­க­வும்" சமூக ஊட­கங்­களில் இணை­ய­வாசி ஒரு­வர் கூறி­யதை அடுத்து இணை­யத்­தில் அது பெரும் விவா­த­மா­னது.

ஒரு காலை இழந்த ஆட­வர், அறி­வுத் திறன் குறை­பா­டுள்ள இளை­யர், கூன் விழுந்த மூதாட்டி உள்­ளிட்­டோரை 8வோர்ல்டு எனும் உள்­ளூர் ஊட­கம் பேட்­டி­கண்­டது. அவர்­கள் யாரும் அர­சாங்க உத­விக்கு விண்­ணப்­பிக்­க­வில்லை என்று ஊட­கம் கூறி­யது.