துருக்கி, சிரியா நிலநடுக்க உதவிப்பணிக்கு சிங்கப்பூர் $270,000 நன்கொடை

துருக்கி, சிரியா நிலநடுக்க உதவிப்பணிக்கு சிங்கப்பூர் $270,000 நன்கொடை

1 mins read
f071e63f-4096-4989-9fd0-82ed5baf8901
-

சிங்­கப்­பூர், துருக்­கி­யின் தென்­கிழக்கு பகு­தி­யை­யும் சிரி­யா­வின் வடக்­குப் பகு­தி­யை­யும் தாக்­கிய நில­ந­டுக்­கத்­தில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உதவ மொத்­தம் 200,000 அமெ­ரிக்க டாலர் தொகையை நன்­கொ­டை­யாக அளிக்­கும்.

அதில் 100,000 டாலரை (S$134.000) சிங்­கப்­பூர் செஞ்­ சி­லு­வைச் சங்­கத்­துக்­கும் 100,000 டாலரை சிரி­யா­வுக்­கான ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் மனி­தா­பி­மான உத­விக் கோரிக்­கைக்­கும் சிங்­கப்­பூர் வழங்­கும்.

இம்­மா­தம் 6ஆம் தேதி ஏற்­பட்ட அந்த நில­ந­டுக்­கத்­தில் இது­வரை 50,000க்கும் அதி­க­மானோர் இறந்­து­விட்­ட­னர். பல்­லா­யி­ரம் பேரைக் காண­வில்லை. குறைந்­தது ஆறு மில்­லி­யன் பேர் வீடு இழந்து தவிக்­கின்­ற­னர்.

"இரு நாடு­க­ளி­லும் நடை­பெற்­று­வ­ரும் மனி­தா­பி­மான உதவி, மறு­நிர்­மா­ணப் பணி­ களுக்கு இப்­பங்­க­ளிப்பு உத­வும்," என்று வெளி­யு­றவு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

"பேரி­ழப்பை உண்­டாக்­கிய இந்­தப் பேரி­ட­ரி­லி­ருந்து மீள இந்தப் பங்­க­ளிப்பு துருக்­கிய, சிரியா மக்­க­ளுக்கு உத­வும் என்று நம்­பு­கி­றோம்," என்றும் அமைச்சு குறிப்பிட்டது.