இளையர்கள் நல்லிணக்க வல்லுநர்களாக புதிய முயற்சி அமைதி, நல்லிணக்கம் தொடர சமயக் குழுக்களுக்கு அதிபர் வலியுறுத்து

இளையர்கள் நல்லிணக்க வல்லுநர்களாக புதிய முயற்சி அமைதி, நல்லிணக்கம் தொடர சமயக் குழுக்களுக்கு அதிபர் வலியுறுத்து

2 mins read
b68c6330-e060-4b83-bd50-94970d131c32
-

சிங்­கப்­பூ­ரில் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் தொடர்ந்து நிலை­நாட்ட, இன, சம­யக் குழுக்­கள் மற்ற சம­யங்­க­ளு­டன் சங்கட மின்றி வாழ்­வதைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று அதிபர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்து இருக்­கி­றார்.

"சமய வேறு­பா­டு­களை ஒதுக்கி வைத்துவிடா­மல் அவற்றைப் பற்றிப் பேசி, அவற்­று­டன் வாழப் பழகிக்­கொண்டு அவற்­றைப் போற்றிக் கொண்­டா­டு­கி­றோம். இதுவே நல்­லி­ணக்க சகோ­த­ரத்­துவ சக­வாழ்­வின் அடிப்­ப­டை­," என்று அவர் தெரி­வித்­தார்.

'ரோசஸ் ஆஃப் பீஸ்' என்ற அமைப்­பின் 10வது ஆண்டு கொண்­டாட்­டத்­தைக் குறிக்­கும் வகை­யில் இஸ்­தா­னா­வில் நேற்று நடந்த நிகழ்ச்­சி­யில் அதி­பர் உரை­யாற்­றி­னார்.

இணை­யம் மூலம் இளை­யர்­கள் தங்­க­ளுக்­குத் தாங்­களே தீவிர மனப்­போக்கை வளர்த்­துக்­கொண்ட அண்­மைய சம்­ப­வங்­கள் பற்றி அவர் குறிப்­பிட்­டார்.

வாழ்க்கை அனு­ப­வ­மற்ற இளை­யர்­கள் இணை­யச் செய்திகளை நம்பி, குழம்பி தவறான வழிகளைப் பின்­பற்று­வதைத் தவிர்க்க வேண்­டும் என அதிபர் ஹலிமா தெரி­வித்­தார்.

உலக நிகழ்­வு­களைப் பற்றி அக்­கறைகொள்­ளும் இளை­யர்­கள் அவற்றைப் பற்றி அனு­ப­வம் வாய்ந்த தலை­வர்­க­ளி­டம் கேட்­ட­றிந்து தங்­க­ளின் சந்­தே­கங்­களைத் தீர்த்துக்கொள்ள, உரை­யாட, சிந்­த­னை­களைப் பகிர்ந்­துக் கொள்ள பாது­காப்­பான சூழலை அமைத்­துக் கொடுக்க வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

இந்த நோக்­கத்­து­டன் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்­பும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் நேற்று கிட்­டத்­தட்ட 80 நல்­லி­ணக்க வல்­லு­நர்­களை நிய­மித்­தன.

அவர்­கள் ஒரு புதிய செயல்­திட்­டத்­தின்­கீழ் நிய­மிக்­கப்­பட்­ட னர். இளை­யர்­க­ளி­டம் அனைத்து சமய, அனைத்து இன புரிந்­து­ணர்வை ஆழ­மாக ஏற்­ப­டுத்­து­வது அந்­தச் செயல்­திட்­டத்­தின் நோக்­கம்.

அந்­தச் செயல்­திட்­டத்­தின் மூலம் இங்­குள்ள உயர்­கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த இளை­யர்­க­ளுக்குப் பயிற்சி அளிக்­கப்­படும். இன, சமய பிணைப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வது, அமை­தியைப் பலப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் தலை­சி­றந்து விளங்­கு­வது ஆகி­ய­வற்­றில் அவர்­கள் பயிற்சி பெறு­வார்­கள்.

நல்லிணக்க வல்­லு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களில் ரிபப்ளிக் பல­துறை தொழிற்­கல்­லூரி மாணவி யான 18 வயது சுருதியும் ஒரு­வ­ர்.

சிறு­வ­ய­தி­லி­ருந்து இனம் பற்றிய எதிர்­ம­றை­யான கருத்­து களைக் கேட்டு வளர்ந்த இவர், பல இன மக்­களைச் சந்­தித்து அவர்­களின் அனு­ப­வங்­களைக் கேட்­டறிந்த பிறகு தன் சிந்­தனை விரி­வ­டைந்­துள்­ளதாகக் கூறி­னார்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யின் இறுதி­யில் 'வேற்­று­மை­யில் நல்­லி­ணக்­கம்: சிங்­கப்­பூ­ரின் செயல்­திட்­டம்' என்ற தலைப்­பில் உரை­யா­டல், கேள்வி பதில் அங்­கம் இடம்­பெற்­றது. அதில் சமூ­கத் தலை­வர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

அமெ­ரிக்­கா­வில் நடப்­பில் உள்ள நாட்­டுப்­பற்று சட்­டத்­தைப் போன்ற ஒரு சட்­டத்தை சிங்கப்பூ­ரில் அமல்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இருக்­கி­றதா என்று இளை­யர் ஒரு­வர் கேள்வி எழுப்­பி­னார்.

வெளி­நாட்டுச் சட்­டங்­களை சிங்­கப்­பூ­ரில் அமல்­ப­டுத்­து­வதற்கு முன் எச்­ச­ரிக்கை கொள்ள வேண்­டும் என்று அங்­கத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் கூறி­னர்.