வலுவாக மீட்சி கண்ட ஜூவல் சாங்கி

வலுவாக மீட்சி கண்ட ஜூவல் சாங்கி

2 mins read
03fbdfbc-fb78-4f3e-be9d-cb65c03e61f8
-

ஜூவல் சாங்கி விமான நிலை­யத்­திற்குப் பழைய பொலிவு திரும்பி இருக்­கிறது. இரண்­டாண்டு கால மாக சாங்கி விமான நிலை­யம் மூடப்­படும் சூழல் ஏற்­பட்டு அத­னால் பெரும் பாதிப்­பு­களை அனு­ப­விக்கவேண்­டிய நிலை இருந்தது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அகன்று இருப்­ப­தா­லும் அனைத்­து­லகப் பய­ணம் மீண்­டும் தொடங்கி இருப்­ப­தா­லும் ஜூவல் சாங்கி விமான நிலை­யத்­தின் $1.7 பில்­லி­யன் சில்­லறை வர்த்­தக வளா­கம் வலு­வாக மீட்சி கண்டு இருக்­கிறது.

பய­ணி­க­ளின் வருகை 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்­டில் இரண்டு மடங்­கிற்­கும் அதி­க­மா­கக் கூடியது என்று ஜூவல் சாங்கி விமான நிலைய மேம்­பாட்­டுப் பிரி­வின் தலைமை நிர்­வாகி ஜேம்ஸ் ஃபோங் கூறி­னார்.

சென்ற ஆண்டு கிறிஸ்­து­மஸ் தினத்­தன்று கிட்­டத்­தட்ட 345,000 பேர் விமான நிலைய சில்­லறை வர்த்­தகக் கடைத்­தொ­கு­திக்கு வருகை அளித்­த­னர்.

இந்த அளவு, 2020ல் கொவிட்-19 தலை­காட்­டி­ய­தற்­குப் பிறகு இடம்­பெற்ற ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும். தொற்­றுக்கு முன்பு ஜூவல் சாங்கி விமான நிலை­யத்­திற்கு நாளும் சுமார் 300,000 பேர் வந்தனர்.

ஜூவல் சாங்கியில் 2022 டிசம்­ப­ரில் நடந்த சில்லறை வர்த்­த­கம் 2019 டிசம்­ப­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் 8% அதி­கம் என்று திரு ஃபோங் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்­திற்­கும் டிசம்­ப­ருக்­கும் இடை­யில் கனோபி பூங்கா போன்ற கவர்ச்சி இடங்­க­ளுக்­கான நுழை­வுச்­சீட்டு விற்­பனை 2019 உடன் ஒப்­பி­டு­கை­யில் சுமார் 80% கூடி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

ஜூவல் சாங்கிக்கு உள்­ளூர் வரு­கை­யா­ளர்­களும் தொடர்ந்து கணி­ச­மான அள­வுக்கு வந்து செல்­கி­றார்­கள்.

சாங்கி விமான நிலை­யத்­தில் பய­ணி­கள் போக்­கு­வ­ரத்து அதி­க­ரிப்­ப­தால் ஜூவல் கடைத்­தொ­கு­திக்கு வந்து செல்­லும் வெளி­நாட்­டி­ன­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கும் என்று தான் எதிர்­பார்ப்­ப­தாக திரு ஃபோங் குறிப்­பிட்­டார்.