காவல்துறை, வங்கிகள் முயற்சி காரணமாக $260,000 தப்பியது

காவல்துறை, வங்கிகள் முயற்சி காரணமாக $260,000 தப்பியது

1 mins read
31e55ec1-aebf-40f0-a800-9cd4479d59af
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த பிப்­ர­வரி மாதம் காவல்­து­றை­யும் வங்­கி­களும் நேர­டி­யாக தலை­யிட்­ட­தன் பல­னாக மோச­டி­களில் சிக்­கா­மல் 680க்கும் மேற்­பட்ட பொது­மக்­கள் தப்­பி­விட்­டார்­கள்.

சிக்­கி­யி­ருந்­தால் அவர்­கள் $260,000க்கும் மேற்­பட்ட தொகையை இழந்து இருப்­பர்­.

நாடு முழு­வ­தும் பிப்­ர­வரி 10 முதல் 24ஆம் தேதி வரை அதி­காரி­கள் எடுத்த அம­லாக்க நட­வடிக்­கை­க­ளின் பல­னாக மொத்­தம் 500 மோச­டி­யா­ளர்­களும் சட்­ட­வி­ரோ­த பணப் புழங்­கிகளும் ­புலன்வி­சா­ர­ணை­யில் உதவி வரு­கி­றார்­கள்.

வர்த்­தக விவ­கா­ரத் துறை அதி­கா­ரி­களும் ஏழு தரை காவல்­துறை பிரி­வு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் தனித்­த­னி­யாக இரண்டு அம­லாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­னர்.

அவற்­றில் ஒரு நட­வ­டிக்கை பல வங்­கி­க­ளு­டன் சேர்ந்து எடுக்­கப்­பட்­டது. மொத்­தம் 680க்கும் மேற்­பட்ட அப்­பா­வி­கள் எச்­சரிக்­கப்­பட்டு மோச­டிக்­கா­ரர்­களின் வலை­யில் சிக்கிவிடாமல் காப்­பாற்­றப்­பட்­ட­னர்.

காவல்­து­றை­யி­னர் தங்­க­ளுக்கு விழிப்­பூட்­டி­ய­தற்­குப் பிறகே மோச­டிக்­கா­ரர்­கள் பற்றியும் அவர்கள் பிடியில் சிக்காமல் தப்பியது பற்றியும் தங்­க­ளுக்­குத் தெரிய­வந்­த­தாக அவர்­கள் கூறினர்.