சிவப்பு விளக்கு மீறல்: இரண்டு நாள்களில் இரு சம்பவங்கள்; பிடோக் சவுத் ரோட்டில் நூலிழையில் உயிர்தப்பிய சிறுவன்

சிவப்பு விளக்கு மீறல்: இரண்டு நாள்களில் இரு சம்பவங்கள்; பிடோக் சவுத் ரோட்டில் நூலிழையில் உயிர்தப்பிய சிறுவன்

2 mins read
992c86ee-20ae-4b2a-a680-e83fa0295646
-

சிவப்பு விளக்கு எரி­ந்தபோதும் அதை மீறி வாக­னத்தை ஓட்­டிச் சென்ற இரண்டு சம்­ப­வங்­கள் இரண்டு நாள்­களில் நிகழ்ந்து இருக்­கின்­றன.

பிடோக் சவுத் ரோட்­டில் வெள்­ளிக்­கி­ழமை காலை நேரத்­தில் நிகழ்ந்த ஒரு சம்­ப­வத்­தில் ஒரு பள்­ளிச் சிறு­வன் நூலி­ழை­யில் உயிர் தப்­பி­னான்.

அந்­தச் சம்­ப­வத்­தைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜி­லண்ட் என்ற ஃபேஸ்புக் குழு­மத்­தில் பதி­வேற்­றப்­பட்­டது.

போக்­கு­வ­ரத்து நிறுத்­தம் ஒன்­றில் நடை­யர்­கள் சாலை­யில் கடந்து செல்­லும் வகை­யில் பச்சை விளக்கு எரி­யத் தொடங்­கி­ய­தும் ஒரு சிறு­வன் சாலை­யின் எதிர்­பு­றம் செல்ல சாலை­யைக் கடந்து ஓடி­னான்.

அப்­போது வாக­னம் நிற்க வேண்­டும் என்­ப­தற்­கான சிவப்பு விளக்கு எரிந்­து­கொண்டு இருந்­தது. இருந்­தா­லும் அதை மீறி ஒரு வாக­னம் வேக­மாக வந்­தது.

நல்லவேளை­யாக அந்­தச் சிறு­வன் டக்­கென்று நின்று திடுக்கிட்டு திரும்பி ஓடி­வந்­து­விட்­டான். அங்­கி­ருந்­த­வர்­களும் அதைப் பார்த்து திடுக்­கிட்­ட­னர்.

பினாங்கு ரோட்­டில் சனிக்­கி­ழமை ஒரு வாக­னம் சிவப்பு விளக்கை மீறிச் சென்­றது.

இந்­தச் சம்­ப­வ­மும் காணொ­ளி­யில் பதி­வா­கி­யது. இந்­தக் காணொ­ளியை அதே இணை­யத்­த­ளம் பதி­வேற்­றி­யது.

சாலைச் சந்­திப்பு ஒன்­றில் சிவப்பு விளக்கு எரிந்­து­கொண்டு இருந்­தது. நடை­யர்­கள் சாலையைக் கடக்க தோதாக பச்சை விளக்கு எரிந்­தது.

அப்­போது சிலர் சாலை­யைக் கடக்கத் தொடங்­கி­னர். அந்த நேரத்­தில் ஒரு வாக­னம் சிவப்பு விளக்கை மீறிச் சென்­றது. பலரும் அந்த வாக­னத்தை நோக்கி கைகாட்டி கண்­டித்­தார்­கள்.

சிவப்பு விளக்கை மீறி வாகனத்தை ஓட்­டிச் சென்­றால் 12 குற்­றப்புள்­ளி­கள் விதிக்­கப்­படும். $400 முதல் $500 வரை அப­ரா­த­மும் உண்டு.

ஆபத்­தான முறை­யில் வாக­னத்தை ஓட்­டிச் செல்­வோ­ருக்கு $5,000 வரை அப­ரா­தம் அல்­லது 12 மாதம் வரை சிறை அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­ப­ட­லாம்.

மீண்­டும் அதே குற்­றத்­தைச் செய்­தால் இரண்­டாண்டு வரை சிறைத்­தண்­டனை அல்­லது $10,000 வரை அப­ரா­தம் அல்லது இரண்­டும் தண்­ட­னை­யாக கிடைக்­கும்.

குற்­ற­வா­ளி­கள் அனைத்து வகை வாக­னங்­க­ளை­யும் ஓட்டிச்செல்ல முடி­யா­த­படி தடை விதிக்­கப்­ப­ட­லாம்.