மிகுஆற்றல் நுண்ணுயிர்களால் ஆபத்து

மிகுஆற்றல் நுண்ணுயிர்களால் ஆபத்து

2 mins read
fd90dd31-1811-47c5-9a32-da8e965e69a5
-

நோய் எதிர்ப்பு மருந்­து­க­ளை­யும் முறி­ய­டிக்­கும் வகை­யில் நுண்­ணு­யிர் மற்­றும் கிரு­மி­கள் எதிர்ப்பு ஆற்­ற­லைப் பெற்று வரு­வ­தால் (AMR) புதிய மருந்­து­கள் கண்­டு­பி­டிக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.

இல்­லை­யென்­றால் 2050ஆம் ஆண்­டு­வாக்­கில் புற்­று­நோ­யால் இறப்­ப­வர்­க­ளை­விட இது அதி­க­மா­ன­வர்­க­ளைக் கொன்­று­வி­டும் என்று சுகா­தா­ரத் துறை நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

கொள்­ளை­நோய் பர­விய காலத்­தில் குறைந்த வரு­மா­னம் முதல் நடுத்­தர வரு­மா­னம் கொண்ட நாடு­களில் தீவிர நோயால் பாதிக்­கப்­பட்டு தீவிர சிகிச்­சைப் பிரி­வில் ஐந்து நாள் களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற வர்­களில் நான்­கில் ஒரு மர­ணம் இந்த மிகு­ஆற்­றல் நுண்­ணு­யி­ரால் ஏற்­பட்­டது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் பேரா­சி­ரி­யர் டேவிட் பேட்­டர்­சன் தெரி­வித் தார்.

பணக்­கார நாடு­க­ளி­லும் இந்­தப் பிரச்­சினை இருந்­தா­லும் பெரிய அள­வில் இல்லை.

"பல மருந்து எதிர்ப்பு நுண்­ணு­யிர் தொற்­றுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள வலு­வான நோயெ­திர்ப்பு மருந்­து­களும் செயல்­ப­ட­வில்­லை­யென்­றால் நாம் உண்­மை­யி­லேயே சிர­ம­மான சூழ்­நி­லை­யில் இருக்­கி­றோம் என்­ப­தா­கும்," என்­றார் அவர்.

'அட்­வான்ஸ்-ஐடி' எனப்­படும் புதிய கட்­ட­மைப்­பின் இயக்குநரா­கப் பேரா­சி­ரி­யர் பேட்­டர்­சன் செயல்­பட்டு வரு­கி­றார்.

இது, 15 நாடு­க­ளைச் சேர்ந்த 60க்கும் மேற்­பட்ட மருத்­துவ மனை­களை ஒருங்­கி­ணைக்­கிறது. மிகு­ஆற்­றல் எதிர்ப்பு கொண்ட நுண்­ணு­யி­ருக்கு எதி­ரான மருந்து களைக் கண்­டு­பி­டிக்­க­வும் நோயைக் கண்­டு­பி­டித்து, தடுப்பு உத்­தி­களை வகுக்­க­வும் இது உதவி வரு­கிறது.

தொற்­று­நோய்­களை நிர்­வ­கிப் பதில் உல­க­ளா­விய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் உயர்­தர மருத்­துவ பரி­சோ­த­னை­களை நடத்­து­வதே இந்­தக் கட்­ட­மைப்­பின் முக்­கிய நோக்­க­மா­கும்.

இந்­தக் கட்­ட­மைப்­பின் தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய பிரிட்­ட­னின் 'வெல்­கம் டிரஸ்ட்' என்ற அறப்­பணி அமைப்­பின் தொற்­று­நோய் தடுப்பு நிலை­யத்­தின் தலை­வ­ரான டாக்­டர் டிமத்தி ஜிங்ஸ், தொற்­று­நோ­யால் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சமூ­கத்­தின் மீது அக்­கறை செலுத்­து­வது அவ­சி­யம் என்று வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­காக தொற்­று­நோய் வளங்­களில் கவ­னம் செலுத்தி வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

'வெல்­கம் டிரஸ்ட்' பத்து மில்­லி­யன் டால­ருக்கு மேல் கட்­ட­மைப்­புக்கு நிதி­யா­த­ரவு அளித்­துள் ளது. இங்­குள்ள, என்­யு­எஸ் சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்ளி, என்­யு­எஸ் யோங் லூ லின் மருத்­து­வப் பள்ளி, டியுக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளி, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழத்­தின் லீ கோங் சியான் மருத்­து­வப் பள்ளி, தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் ஆகிய ஐந்­தும் தலா $500,000 வழங்­கி­யுள்­ளன. இத­னு­டன் சேர்த்து $2.5 மில்­லி­யன் வெள்ளி நிதி­யா­த­ரவு பெற்­றுள்­ளது இந்­தக் கட்­ட­மைப்பு. 2022-2024 ஆண்­டு­க­ளுக்கு இந்த நிதி போது­மா­ன­தாக இருந்­தா­லும் அதன் பிறகு அதிக நிதி தேவைப்­படும்.

2019ல் மிகு­ஆற்­றல் நுண்ணு யிரால் ஏற்­பட்ட ஐந்து மில்லி யனுக்கு மேற்­பட்ட மர­ணங்­களில் பாதி இவ்­வட்­டா­ரத்­தில் நிகழ்ந்­துள்­ள­தால் ஆசி­யா­வில் புதிய மருந்து அல்­லது நோய்த்­த­டுப்பு உத்­தி­க­ளைக் கண்­ட­றி­யும் மருத்­துவ சோத­னை­களை நடத்­து­வது பொருத்­த­மாக இருக்­கும் என்று திரு பேட்­டர்­சன் தெரி­வித்து உள்­ளார்.