தனியார் அடுக்குமாடி மறுவிற்பனை வீட்டு விலையில் திடீர் சரிவு

தனியார் அடுக்குமாடி மறுவிற்பனை வீட்டு விலையில் திடீர் சரிவு

2 mins read
0f02ee77-1a3c-4c0a-b1b5-2afc9dcd45a9
-

கொண்டோமினியம் எனும் தனி­யார் குடி­யி­ருப்பு மறு­விற்­பனை வீட்டு விலை­கள் இரண்டு ஆண்டுக­ளுக்­கும் மேலாக முதல் முறை­யாக ஜன­வ­ரி­யில் குறைந்­தது. சீனப்­புத்­தாண்டு காலத்­தில் கைமா­றிய வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறை­வா­கவே இருந்­தது.

ஒட்­டு­மொத்த கொண்­டோ­ மினிய மறு­விற்­பனை வீட்டு விலை 0.6 விழுக்­காடு குறைந்து உள்ளது. கடந்த டிசம்­பர் மாதம் அதி­க­ரித்த 0.7 விழுக்­காட்­டில் இ­ருந்து இந்­தச் சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

சொத்து இணை­யத்தளங்­க­ளான '99.co', எஸ்­ஆர்­எக்ஸ் ஆகி­யவை நேற்று வெளி­யிட்ட புள்ளி விவ­ரங்­க­ளி­லி­ருந்து இது தெரிய வரு­கிறது.

கடந்த மாதச் சரி­வுக்கு முன்பு கொண்­டோ­மி­னிய மறு­விற்­பனை வீட்டு விலை­கள் தொடர்ந்து 29 மாதங்­க­ளாக அதி­க­ரித்து வந்­தன. இதற்கு முன்பு 2020 செப்­டம்­ப­ரில்­தான் வீட்டு விலை­கள் குறைந்­தன. அப்­போது, கொள்ளை­ நோய் கார­ண­மாக விதிக்கப்பட்ட பல்­வேறு தூர இடை­வெளி கட்டுப்­பா­டு­களால் ஒரு விழுக்­காடு சரிவு ஏற்­பட்­டது.

இருந்­தா­லும் ஜன­வரி மாதம் வீட்டு விலை வீழ்ச்­சிக்கு விற்­பனை நட­வ­டிக்­கை­யில் மந்­த­மான பரு­வமே கார­ணம் என்று சொத்­துப் பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

உயர் வட்டி விகித சூழ­லைக் கருத்­தில்கொண்டு வீட்டு விற்­ப­னையை உரி­மை­யா­ளர்­கள் நிறுத்தி வைத்­தி­ருந்­த­னர். வரும் மாதங்­களில் வீட்டு விலை­கள் தொடர்ந்து சரி­யுமா என்­பதை பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும்.

ஜன­வ­ரி­யில் விலை­யு­யர்ந்த பரி­வர்த்­த­னை­கள் குறை­வாக இருந்­தது என்று உல­க­ளா­விய ஒரு நிறு­வ­னத்­தின் மூத்த பகுப்­பாய்­வா­ள­ரான மோகன் சந்­தி­ர­சே­க­ரன் தெரி­வித்­தார்.

வீடமைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் மறு­விற்­பனை வீடு­களில் ஏற்­பட்ட ஆர்­வம் விலைச்­ச­ரி­வுக்­கான கார­ணங்­களில் ஒன்­றாக இருக்­க­லாம்.

தனி­யார் குடி­யி­ருப்­பில் தங்­க­ளுக்­குத் தகுந்த வீடு­கள் கிடைக்­கா­த­வர்­கள் கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய வீவ­க­வின் மறு­விற்­பனை வீடு­கள் பக்­கம் திரும்­பி­யி­ருக்­க­லாம் என்று திரு சந்­தி­ர­சே­க­ரன் கூறினார்.

பெரிய வாழ்விடங்களுக்கான தேவை அதிகரித்துவருவதால் வீவக மறுவிற்பனை வீடுகளை சிறந்த தேர்வாக சில வீடு வாங்குவோர் கருதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வெளி நாட்டவர்கள் தனியார் மறுவிற் பனை வீடுகளைவிட புதிய தனி யார் வீடுகளில் ஆர்வம் காட்டு கின்றனர். இதுவும் மறுவிற்பனை வீடு வாங்குவோரின் எண் ணிக்கையை குறைவதற்குக் காரணம் என்றார் அவர்.

ஜனவரியில் மத்திய வட்டாரத் தில் விலை 2.5 விழுக்காடு கூடியது. புறநகர்ப் பகுதிகளில் 1.2 விழுக்காடு குறைந்தது.

இதற்கிடையே தொடர்ந்து நான்காவது மாதமாக ஜனவரியில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக் கை குறைந்தது. இதற்கு, 2022 செப்டம்பரில் அமலுக்கு வந்த சொத்துச் சந்தையை நிலைப் படுத்தும் கட்டுப்பாடுகள் காரண மாகும்.