சிங்கப்பூரில் மாபெரும் முஸ்லிம் விழா

சிங்கப்பூரில் மாபெரும் முஸ்லிம் விழா

2 mins read
7ca623c6-b458-4ded-b98f-da1a0b32bf37
-

மோன­லிசா

சிங்­கப்­பூ­ரில் இஸ்­லா­மிய சம­யத்­தின் வர­லாற்று பின்­பு­லத்­தை­யும் மகத்­து­வத்­தை­யும் எடுத்துக் கூறும் வகை­யில் மாபெ­ரும் முஸ்­லிம் விழா எனும் கண்­காட்­சியை 'ஜாமியா சிங்­கப்­பூர்' எனும் இஸ்­லா­மிய தொண்டு நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

இக்­கண்­காட்­சி­யின் கொண்­டாட்ட நிகழ்­வு­கள் மார்ச் மாதம் மூன்­றாம் தேதி முதல் ஐந்­தாம் தேதி வரை சிங்­கப்­பூர் எக்ஸ்போ அரங்­கம் 5ல் நடை­பெ­ற­வுள்­ளன.

மூன்று நாள்­களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடை­பெ­றும் இந்­நி­கழ்­விற்கு அனு­மதி இல­வ­சம்.

இவ்­வாண்டு கண்­காட்­சி­யில் இளை­யர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் மெய்­நி­கர் தொழில்­நுட்ப முறை­யில் நபி­கள் நாய­கம் இஸ்­லாத்­துக்கு ஆற்­றிய தொண்­டையும் பங்­க­ளிப்­பை­யும் காட்­சிப்­ப­டுத்­தும் சிறப்பு அங்­க­மும் இடம்­பெ­றும்.

அசை­யும் இருக்­கை­கள் மற்றும் சிறப்பு மூக்­குக் கண்­ணா­டி­க­ளின் உத­வி­யு­டன் பார்­வை­யா­ளர்­கள் கண்­டு­க­ளிக்­க­லாம்.

கூடு­த­லாக நபி­கள் நாய­கம் பயன்­ப­டுத்­திய தலை­யங்கி, கைத்­தடி, தலை­முடி உள்­ளிட்ட பொருள்­கள் 'சீறா கண்­காட்சி' அங்­கத்­தின் மூலம் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இத்­து­டன் மெக்கா அல்-முனா­வா­ரா­வில் அவர் வாழ்ந்த வீட்­டின் மாதி­ரி­யும் காட்­சிப்­ப­டுத்­தப்­படும்.

மேலும் இந்­நி­கழ்­வில் சொற்­பொ­ழி­வு­கள், கதை சொல்­லும் அங்­கங்­கள், கலை நிகழ்­வு­கள் போன்ற பொழு­து­போக்கு அம்­சங்­களும் இடம்­பெ­றும். குறிப்­பாக, தமிழ் பேசும் பார்­வை­யா­ளர்­க­ளுக்­காக, இஸ்­லா­மிய சம­யத்­தைப் பற்­றிய சொற்­பொ­ழி­வு­களும் இன்­னிசை கச்­சே­ரி­களும் தமி­ழி­லும் இடம்­பெ­ற­வுள்­ளன.

இத்­து­டன் இக்­கண்­காட்­சி­யில் 150க்கும் மேற்­பட்ட உள்­ளூர் மற்­றும் வெளி­நாட்டு விற்­ப­னை­யா­ளர்­க­ளின் விற்­ப­னைச் சாவ­டி­கள் நிறு­வப்­படும்.

ஹலால் உணவு வகை­கள், ஆடை­கள், ஆப­ர­ணங்­கள் உள்­ளிட்ட அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் பல்­வேறு பொருள்­களும் இச்­சா­வ­டி­களில் விற்­கப்­படும்.

கொவிட்-19 நோய்த்­தொற்று கார­ணத்­தி­னால் ஈராண்­டு­கள் நடை­பெ­றா­மல் இருந்த இந்­நி­கழ்­வில் இவ்­வாண்டு மொத்­தம் 50,000க்கும் மேற்­பட்ட உள்­ளூர் வாசி­களும் சுற்­று­ப் பய­ணி­களும் கலந்­து­கொள்­வார்­கள் என்று எதிர்ப்­பார்ப்­ப­தாக ஏற்­பாட்­டுக் குழு தெரி­வித்­தது.

இது குறித்து ஜாமியா சிங்­கப்­பூ­ரின் சமய நல்­லி­ணக்க தொடர்பு நெறி­யா­ளர் டாக்­டர் எச் முஹம்மது சலீம், "முஸ்­லிம் இளை­யர்­கள் மத்­தி­யில் சமய கோட்­பா­டு­க­ளை­யும் நெறி­மு­றை­க­ளை­யும் வளர்க்­கும் நோக்­கில் இக்­கொண்­டாட்ட நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இளை­யர்­கள் சமூக பொறுப்­பு­ணர்­வு­ட­னும் பக்­கு­வத்­து­ட­னும் வளர்ந்து மேம்­பட இது­போன்ற ஒன்­று­கூ­டல் நிகழ்­வு­கள் பெரி­தும் வர­வேற்­கப்­பட வேண்­டிய ஒன்று," என்று கூறி­னார்.