சேவைத் துறையில் 2030க்குள் 100,000 புதிய வேலைகள்

சேவைத் துறையில் 2030க்குள் 100,000 புதிய வேலைகள்

1 mins read
f603d0ea-6614-4eff-96df-8ddc5a891a0a
முன்­ன­ணித் தொழில் நடு­வம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாட்டை வலுப்­ப­டுத்த இந்த வழி­காட்­டித் திட்­டம் உத­வும் என்று அமைச்­சர் கான் கூறி­னார். படம்: ஏஎஃப்பி -

நவீன சேவைத்­து­றை­யில் வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் 100,000க்கு மேற்­பட்ட கூடு­தல் வேலை­கள் உரு­வாக்­கப்­படும்.

அதே­வே­ளை­யில், அந்­தத் துறை­யில் குறைந்­தது 50 விழுக்­காட்டு வேலை­களை மதிப்­பு­கூட்­டப்­பட்ட வேலை­க­ளாக மாற்­ற­வும் சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இத­னைத் தெரி­வித்­தார்.

புதிய 'சேவை­கள் 2030' உத்­தி­யின்­கீழ் இந்த நட­வ­டிக்­கை­கள் அமை­யும். சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் 2030 கண்­ணோட்­டத்­தின் முக்­கிய அம்­சங்­க­ளின் இது­வும் ஒன்று.

இந்த உத்­தி­யின்­கீழ், தொழில்­மு­றைச் சேவைத் துறை உரு­மாற்ற வழி­காட்டி 2025 எனும் திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

தொழில்­மு­றைச் சேவை, நிதிச் சேவை, தக­வல்­தொ­டர்பு தொழில் நுட்­பம், ஊட­கச் சேவை ஆகி­யவை நவீன சேவை­கள் குழு­மம் எனப்­ப­டு­கின்­றன.

முன்­ன­ணித் தொழில் நடு­வம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாட்டை வலுப்­ப­டுத்த இந்த வழி­காட்­டித் திட்­டம் உத­வும் என்று அமைச்­சர் கான் கூறி­னார்.

மின்­னி­லக்­கம், நீடித்த நிலைத்­தன்மை, வள­ரும் பொரு­ளி­யல்­கள் போன்­ற­வற்­றால் வர்த்­தக வளர்ச்சி வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்­று­வ­தில் சிங்­கப்­பூ­ரின் தொழில்­மு­றைச் சேவைத் துறை சிறப்­பா­கப் பணி­யாற்­று­வ­தாக அவர் கூறி­னார்.

இந்­தத் துறை­யில் சிங்­கப்­பூரர்­க­ளின் திறன் மேம்­பாடு, மறு­தி­றன் பயிற்சி ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்­கம் உத­வும் என்­றார் திரு கான்.