ஆங்கிலோ-சீனப் பள்ளி இடமாற்றம் குறித்துக் கல்வி அமைச்சர் சான் விளக்கம்

ஆங்கிலோ-சீனப் பள்ளி இடமாற்றம் குறித்துக் கல்வி அமைச்சர் சான் விளக்கம்

2 mins read
ae63a97f-ed47-4578-b544-952f01c2b283
இட­மாற்­றம் அல்­லது இரு­பா­ல­ருக்­கு­மான பள்­ளி­யாக மாறு­தல் உள்­ளிட்ட பெரிய அள­வி­லான மாற்­றங்­கள் நிக­ழும்­போது, அமைச்சு கூடு­மா­ன­வரை முன்­கூட்­டியே தக­வல் வெளி­யி­டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆங்­கிலோ-சீனத் தொடக்­கப் பள்­ளியை 2030ஆம் ஆண்டு தெங்கா வட்­டா­ரத்­திற்கு மாற்­றும் திட்­டம் குறித்­துப் பள்ளி நிர்­வா­கம் தெரி­வித்­த­போது அதனை இரு­பா­ல­ரும் பயி­லும் பள்­ளி­யாக அமைத்­தால் மட்­டுமே இட­மாற்­றம் சாத்­தி­யம் என்று கல்வி அமைச்சு குறிப்­பிட்­டது.

அவ்வாறு செய்தால்தான், தெங்கா வட்­டா­ரப் பிள்­ளை­களின் தொடக்­கப் பள்­ளிச் சேர்க்கை வாய்ப்­பு­கள் பாதிக்­கப்­ப­ட­மாட்டா.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இவ்வாறு குறிப்­பிட்­டார்.

ஆங்­கிலோ-சீனத் தொடக்­கப் பள்ளி தொடர்ந்து ஆண் மாணாக்­கர்­களை மட்­டுமே சேர்த்­துக்­கொண்­டால், தெங்கா வட்­டா­ரத்­தில் உள்ள மற்ற தொடக்­கப் பள்­ளி­களை அது பாதிக்­கும்.

அவற்­றில் மாண­வர், மாண­வி­யர் எண்­ணிக்­கை­யில் சம­நிலை பாதிக்­கப்­படும். இது­கு­றித்துப் பள்ளி நிர்­வா­கத்­தி­டம் கல்வி அமைச்சு எடுத்­துக்­கூ­றி­யது. இருபாலர் பள்ளியாக மாற்றும்படி ஆலோசனை கூறியது. அதனை ஏற்று, ஆங்­கிலோ-சீனப் பள்ளி நிர்­வா­கம் இடம் மாறத் திட்­ட­மிட்­டது மகிழ்ச்சி அளிப்­ப­தாக அமைச்­சர் சான் கூறி­னார்.

பள்­ளி­க­ளின் இட­மாற்­றம் குறித்து அமைச்சு எவ்­வாறு முடிவு­செய்­கிறது என்ற கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

ஒரு­பா­லர் பயி­லும் பள்­ளி­களில் இரு­பா­ல­ரை­யும் சேர்க்­கும் வகை­யில் மாற்­றம் செய்­ய கல்வி அமைச்சு திட்­ட­மி­டு­கி­றதா என்­றும் அவ­ரி­டம் கேட்­கப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் சான், முன்­னர் அத்­த­கைய சம்­ப­வங்­கள் நிகழ்ந்­த­துண்டு என்­ற­போ­தும் தற்­போது அவ்­வாறு திட்­டம் ஏதும் இல்லை என்­றார்.

அந்­தந்­தப் பள்ளி நிர்­வா­கத்­து­டன் கலந்­து­பேசி அதன் அடிப்­படை­யில் ஒவ்­வொரு பள்­ளிக்­கு­மான மாற்­றத்­திற்­குத் தேவைப்­படும் ஆத­ரவை அமைச்சு வழங்­கு­கிறது என்­றார் திரு சான்.

இட­மாற்­றம் அல்­லது இரு­பா­ல­ருக்­கு­மான பள்­ளி­யாக மாறு­தல் உள்­ளிட்ட பெரிய அள­வி­லான மாற்­றங்­கள் நிக­ழும்­போது, அமைச்சு கூடு­மா­ன­வரை முன்­கூட்­டியே தக­வல் வெளி­யி­டும்.

பள்­ளி­யின் தற்­போ­தைய மாண­வர்­க­ளுக்­கும் அவர்­தம் குடும்­பங்­க­ளுக்­கும் அதி­கம் பாதிப்பு ஏற்­படா வண்­ணம், இத்­த­கைய ஏற்­பா­டு­களில் அமைச்சு பள்­ளிக்கு உத­வும் என்று அவர் சொன்­னார்.

வின்ஸ்­டெட் ரோட்­டில் உள்ள ஆங்­கிலோ-சீனப் பள்ளி வளா­கம் காலி­யா­கும்­போது அந்த இடம் அர­சாங்­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.