லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறுவீடுகள்

லாசரஸ் தீவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறுவீடுகள்

2 mins read
758941c5-a371-4a61-b55c-f4f1f0e7ae28
-
multi-img1 of 2

லாச­ரஸ் தீவை சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த வகை­யில் சுற்­று­லாப் பய­ணி­கள் தங்­கு­மி­ட­மாக உரு­மாற்­றும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன.

குறைந்த கரி­ய­மில வாயு வெளி­யேற்­றும் சிறு­வீ­டு­கள் அங்கு கட்­டப்­படும். 'டைனி அவே எஸ்­கேப் அட் லாச­ரஸ் ஐலண்ட்' எனும் பெய­ரில் ஐந்து சிறு­வீ­டு­கள் அடுத்த மாதம் பய­ணி­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­பட இருக்­கின்­றன.

ஒவ்­வொரு வீடும் 150 சதுர அடி பரப்­ப­ள­வில் அமைந்­தி­ருக்­கும். இது கிட்­டத்­தட்ட, வழக்­க­மான ஹோட்­டல் அறை ஒன்­றில் பாதி­ய­ளவு இருக்­கும்.

லாச­ரஸ் தீவை அடுத்த மூன்று ஆண்­டு­களில் சுற்­றுப் பய­ணி­க­ளைக் கவ­ரும் தல­மாக மாற்­றும் அதே­வே­ளை­யில் சுற்­றுப்­பு­றத்­திற்கு மிகக் குறைந்த அளவே தாக்­கம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அதைச் செய்து முடிக்க செந்­தோசா மேம்­பாட்­டுக் கழ­கம் பரிசீலித்து வருகிறது.வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

இந்­தச் சிறு­வீ­டு­கள், மறு­பயனீடு செய்­யக்­கூ­டிய பொருள்­களைப் பயன்­ப­டுத்­திக் கட்­டப்­படு­கின்­றன. வீணான உணவை 24 மணி நேரத்­திற்­குள் மக்க வைக்­க­வும் இவற்­றில் வசதி உள்­ளது.

இவ்­வீ­டு­கள் பெரும்­பா­லும் சூரி­ய­சத்தி மூலம் மின்­சக்தி விநி­யோ­கம் பெறு­கின்­றன.

ஜூன் மாதத்­தில் இருந்து கட்­டங்­கட்­ட­மாக சிறு கடை, நீர் விளை­யாட்டு நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வற்­றிற்கு ஏற்­பாடு செய்­யப்­படும்.

உல­க­ள­வில் நீடித்த நிலைத்­தன்­மை­யு­டன்­கூ­டிய சுற்­று­லாத் தலங்­க­ளுள் ஒன்­றாக சிங்­கப்­பூர் அங்­கீ­க­ரிப்­பட்­டுள்­ளது.

லாச­ரஸ் தீவு சிறு­வீ­டு­கள், 2030ஆம் ஆண்­டுக்­குள் நீடித்த நிலைத்­தன்மை அம்­சம் கொண்ட நக­ர­மாக உரு­வெ­டுப்பதன் தொடர்பில் சிங்­கப்­பூ­ர் கொண்டுள்ள கடப்­பாட்­டை­யும் அதற்காக நாடு மேற்கொள்ளும் முயற்­சி­யை­யும் காட்டுவதா­கத் திரு டான் குறிப்­பிட்­டார்.