4,428 புதிய பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன

4,428 புதிய பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன

3 mins read
56c2d17e-6e3c-459c-b4b8-49635afa1b6c
-

டோவர் கிரசெண்ட், ஃபேரர் பார்க்கில் அதிக நிபந்தனைகளுடன்கூடிய வீடுகள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று 4,428 பிடிஓ வீடு­களை விற்­ப­னைக்கு விட்டது. அவற்­றில் டோவர் கிர­செண்ட், ஃபேரர் பார்க்­கில் உள்ள இரண்டு பிரதான இட பொது வீட­மைப்­புத் திட்­டத்­தின்­கீழ் (பிஎல்­ஹெச்) கட்­டப்­படும் வீடு­களும் அடங்­கும்.

அந்த இரண்டு திட்­டங்­களில் ஒன்று முதிர்ச்­சி­ய­டைந்த குவீன்ஸ்­ட­வுன் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யி­லும் மற்­றொன்று காலாங்/வாம்போ குடி­யி­ருப்­புப் பேட்­டை­யிலும் இடம்­பெ­று­கின்­றன.

இந்­தத் திட்ட வீடு­களை வாங்­க­வும் விற்­க­வும் கடு­மை­யான நிபந்­த­னை­களை நிறை­வேற்ற வேண்­டும். இவற்றை விற்­கும்­போது 6% மானி­யத் ெதாகையைத் திருப்பிக் கழ­கத்­தி­டம் கொடுத்­து­விட வேண்­டும்.

நேற்று தொடங்­கிய இந்த ஆண்­டின் முதல் வீட்டு விற்­பனை­யில் இதர மூன்று திட்ட வீடு­களும் இடம்­பெ­று­கின்­றன.

அவற்­றில் ஒன்று காலாங்/வாம்­போ­வில் இடம்­பெ­று­கிறது. இது பிஎல்­ஹெச் திட்­டத்­தின்­கீழ் வராது. ஜூரோங் வெஸ்ட், தெங்கா ஆகிய இதர இரண்டு புதிய பேட்­டை­களில் மற்ற இரண்டு திட்ட வீடு­களும் கட்­டப்­படும்.

மொத்தம் ஐந்து திட்­டங்களில் கட்டப்படும் புதிய வீடு­களுக்குச் சரா­ச­ரி­யாக 4.4 ஆண்­டு­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

ஜூரோங் வெஸ்ட், தெங்­கா­வில் கட்டிக் கொடுக்­கப்­படும் நாலறை வீடு­கள் அனைத்­தும் மானி­யம் சேரா­மல் $400,000 விலைக்­குக் கீழ் இருக்­கும் என்று வீவக தெரி­வித்து இருக்­கிறது.

குவீன்ஸ்­ட­வு­னில் உலு பாண்­டான் கிளேட்­சில் மொத்­தம் 732 மூவறை, நாலறை வீடு­கள் கட்­டப்­படும். இவற்­றில் மூவறை வீட்­டின் விலை மானி­ய­மின்றி $372,000 முதல் $498,000 வரை இருக்­கும்.

நாலறை வீட்­டின் விலை $541,000 முதல் $711,000 வரை இருக்­கும். இந்த வீடு­களே நேற்று விற்­ப­னைக்கு வந்த வீடு­களில் ஆக அதிக விலை­யுள்ள வீடு­கள். இவற்­றைப் பெற 68 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

நேற்று விற்­ப­னைக்கு வந்த இரண்­டா­வது பிஎல்­ஹெச் திட்ட வீடு­கள் ஃபேரர் பார்க் ஃபீல்ட்ஸில் கட்­டப்­படும். இந்­தத் திட்­டத்­தில் 1,274 ஈரறை நீக்­குப்­போக்கு, மூவறை, நாலறை வீடு­கள் இடம்­பெற்று இருக்­கும்.

லிட்­டில் இந்­தி­யா­வுக்­கும் ஃபேரர் பார்க் எம்­ஆர்டி நிலை­யத்­திற்­கும் இடை­யில் உள்ள ஒரு நிலப் பகு­தி­யில் இந்த வீடு­கள் எழும். இவற்­றில் மூவறை வீட்­டின் விலை $356,000 முதல் $449,000 வரை இருக்­கும். நாலறை வீட்­டின் விலை $484,000 முதல் $631,000 வரை இருக்­கும். இந்த வீடு­களுக்குச் சுமார் 53 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

காலாங்/வாம்­போ­வில் கட்­டப்­படும் இதர பிடிஓ திட்­டத்­தில் 510 மூவறை, நாலறை வீடு­கள் இடம்­பெற்று இருக்­கும். இவை காலாங் ஆற்­றுக்குப் பக்­கத்­தில் ஜாலான் ராஜா­வில் உள்ள ஓர் இடத்­தில் கட்­டப்­படும்.

விலை­கள் மூவறை வீட்­டிற்கு $326,000 முதல் $443,000 வரை­யும் நாலறை வீட்­டிற்கு $459,000 முதல் $631,000 வரை இருக்­கும். இவற்­றுக்கு 58 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

தெங்கா, ஜூரோங் வெஸ்ட்­டில் கட்­டப்­படும் நாலறை அதற்கும் பெரிய பிடிஓ வீடு­களில் குறைந்­த­பட்­சம் 95% வீடு­களும் மூவறை வீடு­களில் குறைந்­த­பட்­சம் 85% வீடு­களும் முதல்­முறை வீட்டை வாங்­கும் குடும்­பங்­க­ளுக்­காக ஒதுக்­கப்­படும்.

இவற்­றைப் பெற நான்கு ஆண்­டு­க­ளுக்­கும் குறை­வான காலமே காத்­தி­ருந்­தால் போதும். தெங்­கா­வில் 1,641 வீடு­களும் ஜூரோங் வெஸ்ட்­டில் 271 வீடு­களும் கட்­டப்­ப­டு­கின்­றன.

நேற்று விற்­ப­னைக்கு வந்த வீடு­க­ளுக்­கான விண்­ணப்­பங்­கள் வீவக வீட்டு இணையவாயி­லில் மார்ச் 6ஆம் தேதி இரவு 11.59 மணிக்­குள் தாக்­க­லாக வேண்டும். சீட்டு குலுக்­கல் மூலம் வீடு­கள் ஒதுக்­கப்­படும்.