எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்தும் இடைவழிப் பேருந்தும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று விபத்துக்குள்ளாயின.
அதில் பேருந்து ஓட்டுநர் ஒரு வரும் இரண்டு பயணிகளும் காயம் அடைந்தனர். மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து கென்ட் ரிட்ஜ் கிரசெண்டில் நிகழ்ந்தது.
இடைவழிப் பேருந்து ஓட்டுநரும், 41, ஒரு பேருந்தில் இருந்த ஒரு மாதும், 25, மற்றொரு பேருந்தில் இருந்த வேறு ஒரு மாதும், 36, காயமடைந்து சுயநினைவுடன் இருந்ததை அங்கு விரைந்த அதிகாரிகள் கண்டனர்.
விபத்து தொடர்பில் புலன் விசாரணை நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சிறிய அளவில் காயம் அடைந்த இதர இரண்டு பேர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.

