பிப்ரவரியில் சாதனை அளவு மழை; இந்த மாதமும் மழை தொடரும்

சிங்­கப்­பூ­ரின் கிழக்கு மற்­றும் தெற்கு வட்­டா­ரங்­களில் நேற்று முன்­தி­னம் பெய்த மழை மிக­வும் கடு­மை­யா­னது என்று தெரிய வந்­துள்­ளது.

மேலும், காலாங்­கில் பதி­வான அன்­றாட மொத்த மழை அளவு 225.5 மில்­லி­மீட்­டர் என்று பதி­வா­னது.

இது பிப்­ர­வரி மாதத்­தில் பெய்த ஆக அதிக மழை அளவு என கணக்­கி­டப்­பட்டு உள்­ளது.

இதற்கு முன்­னர் 1995ஆம் ஆண்டு பிப்­ர­வரி 4ஆம் தேதி 159.3 மில்­லி­மீட்­டர் பதி­வா­னதே ஆக அதிக பிப்­ர­வரி மாத மழை­யாக இருந்து வந்­தது.

தென்­சீ­னக் கட­லில் உரு­வான குளிர்ந்த வெப்­ப­நி­லை­யால் தீவின் மழைப்­பி­டிப்பு பகு­தி­களில் 100 மில்­லி­மீட்­ட­ருக்­கும் மேல் மழை பெய்­தது.

அத்­து­டன் தீவு முழு­வ­தும் குளிர் வெப்­ப­நி­லை உரு­வா­னது. சிங்­கப்­பூ­ரின் மத்­திய வட்­டா­ரத்­தில் நேற்­றுக் காலை 21.1 டிகிரி சென்டிகி­ரேட் என்று குளிர்ந்த வெப்­ப­நிலை பதி­வா­னது.

தீவின் இதர பகு­தி­க­ளி­லும் கிட்­டத்­தட்ட 21.7 டிகிரி சென்டி­கி­ரே­டுக்­கும் 23.1 டிகிரி சென்டி­கி­ரே­டுக்­கும் இடை­யில் குளிர்ந்த வெப்­ப­நிலை பதி­வா­னது.

பிப்­ர­வரி மாதத்­தின் இரண்­டாம் பாதி­யில் பெரும்­பா­லும் வறண்ட நிலை இருந்­த­போ­தி­லும் ஒட்­டு­மொத்­த­மா­கக் கணக்­கி­டு­கை­யில் அந்த மாதத்­தின் சரா­சரி அள­வைக் காட்­டி­லும் கூடு­த­லாக மழை பெய்­த­தாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு சேவை நிலை­யம் நேற்று தெரி­வித்­தது.

குறிப்­பாக, தஞ்­சோங் காத்­தோங் வட்­டா­ரத்­தில் வழக்­கத்­திற்கு மாறாக, சரா­சரி அள­வைக் காட்­டி­லும் 281 விழுக்­காடு அதி­க­மாக மழை பெய்­தது.

வட­கி­ழக்­குப் பரு­வ­நிலை

பிப்­ர­வரி மாதம் சிங்­கப்­பூ­ரி­லும் சுற்­று­வட்­டா­ரத்­தி­லும் நீடித்­த­தன் கார­ண­மாக மழை அளவு கூடி­யது.

இதே நில­வ­ரம் இந்த (மார்ச்) மாதத்­தின் முதல் வாரத்­தி­லும் நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

பெரும்­பா­லான நாள்­களில், பிற்­ப­க­லில் இடி­யு­டன் கூடிய மழையை எதிர்­பார்க்­க­லாம் என்று நிலை­யம் நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. சில நாள்­களில் மாலை­நே­ரம் வரைகூட மழை நீடிக்­கக்­கூ­டும் என்றது அந்த நிலையம்.

இருப்­பி­னும் இந்த மாதத்­தின் பிற்­பா­தி­யில் கிட்­டத்­தட்ட வறண்ட நிலை ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் இருப்­ப­தா­க­வும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

“மார்ச் மாதத்­தின் முதல் பாதி­யில் சிங்­கப்­பூ­ரின் பெரும்­பா­லான பகு­தி­களில் சரா­சரி அள­வைக் காட்­டி­லும் அதிக மழை பெய்­யும் என்று முன்­னு­ரைக்­கப்­ப­டு­கிறது,” என்று ஆய்வு நிலை­யம் கூறி உள்­ளது.

அதற்­கேற்ப அன்­றாட வெப்­ப­நிலை 24 டிகிரி சென்டி­கி­ரே­டுக்­கும் 33 டிகிரி சென்­டி­கி­ரே­டுக்­கும் இடைப்­பட்டு இருக்­கும் என்­றும் மேக­மூட்­டம் குறைந்த நாள்­களில் இது 34 டிகிரி சென்டிகி­ரேட் வரை தொடக்­கூ­டும் என்­றும் அது மேலும் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!