முக்கிய பங்குச்சந்தை நிறுவனங்களின் நிர்வாக சபையில் கூடுதல் பெண்கள்

முக்கிய பங்குச்சந்தை நிறுவனங்களின் நிர்வாக சபையில் கூடுதல் பெண்கள்

2 mins read
4d756057-298d-4d3d-9499-7b90ef8990c6
2022இல் பங்­குச் சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள 100 முக்­கிய நிறு­வ­னங்­க­ளின் முதல்­மு­றை­யாக நிர்­வாக சபை இயக்­கு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களில் 21 விழுக்­காட்­டி­னர் பெண்­கள், 26 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள். படம்: பிக்ஸாபே -

சிங்­கப்­பூர் பங்­குச் சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள 100 ஆகப் பெரிய நிறு­வ­னங்­க­ளின் நிர்­வாக சபை­களில் இயக்­கு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பெண்­க­ளின் விகி­தம் 2022இல் சாதனை அளவை எட்­டி­ய­தாக ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு அந்­நி­று­வ­னங்­களில் நிர்­வாக இயக்­கு­நர்­களில் பெண்­கள் 36 விழுக்­காடு பங்கை வகித்­த­னர். 2013இல் இத்­த­கைய புள்­ளி­வி­வ­ரங்­களை சேக­ரிக்­கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து இதுவே ஆக அதிக விகி­த­மா­கும்.

2021ஆம் ஆண்­டில் நிர்­வாக மன்ற இயக்­கு­நர்­களில் 23 விழுக்­காட்­டி­னர் பெண்­க­ளாக இருந்­த­னர். நிர்­வாக சபை­க­ளின் பன் முகத்­தன்­மைக்­கான மன்­றம் சுமார் 1,300 நிறு­வ­னங்­க­ளி­டம் மேற்­கொண்ட ஆய்­வின் முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

2022இல் பங்­குச் சந்­தை­யில் இடம்­பெற்­றுள்ள 100 முக்­கிய நிறு­வ­னங்­க­ளின் முதல்­மு­றை­யாக நிர்­வாக சபை இயக்­கு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களில் 21 விழுக்­காட்­டி­னர் பெண்­கள், 26 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள்.

இது 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது முன்­னேற்­ற­மா­கும். அவ்­வாண்­டில் முதன்­மு­றை­யாக நிர்­வாக சபை இயக்­கு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டோ­ரில் 14 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே பெண்­கள். முதன்­முறை இயக்­கு­நர்­களில் ஆண்­கள் 45 விழுக்­காட்­டுப் பங்கை வகித்­த­னர்.

சிட்டி டிவ­லப்­மண்ட்ஸ் சொத்து நிறு­வ­னம், ஃபிரேஸர் அண்ட் நீவ் உணவு பான நிறு­வ­னம், சொகுசு கடி­கா­ரங்­களை விற்­கும் தி ஹவர் கிளாஸ், முத­லீட்டு நிறு­வ­ன­மான ஜார்­டின் சைக்­கிள் அண்ட் கேரஜ் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் கடந்த 2022இல் முதன்­மு­றை­யா­கப் பெண்­களை நிர்­வாக சபை­யில் இயக்­கு­நர்­க­ளாக நிய­மித்­தன.

சிங்­கப்­பூர் பங்­குச்­சந்­தை­யின் புதிய விதி­மு­றைக்கு ஏற்ப நிறு வனங்­கள் கூடு­தல் பெண்­களை நிர்­வாக சபை­யில் சேர்த்­தி­ருக்­க­லாம் என்று நிர்­வாக சபை­க­ளின் பன்­மு­கத்­தன்­மைக்­கான மன்­றம் கூறி­யது. அதன்­படி நிர்­வாக சபை­யில்ல் பன்­மு­கத்­தன்­மையை ஏற்­ ப­டுத்­தும் கொள்­கை­களை நிறு­வ­னங்­கள் பங்­குச்­சந்­தை­யி­டம் தெரி­விக்க வேண்­டும்.