மயக்கமருந்து நிபுணர்கள், மயக்கநிலையில் இருக்கும் நோயாளியை முறையாகக் கண்காணிக்க பயிற்சி பெற்றவர்கள் என அந்த நிபுணர்களைப் பிரதிநிதிக்கும் இரு அமைப்புகள் தெரிவித்தன.
சில மயக்கமருந்து நிபுணர்கள் கைப்பேசியில் பேசுவது போன்றவற்றுக்காக அறுவைசிகிச்சையின்போது அறுவைசிகிச்சை கூடத்தைவிட்டு வெளியே செல்கிறார்கள். இது பற்றிக் கேட்டதற்கு மயக்கமருந்து நிபுணர்கள் கல்லூரியும் சிங்கப்பூர் மயக்கமருந்து நிபுணர்கள் சங்கமும் விளக்கம் அளித்தன.
மயக்கமருந்து நிபுணர்கள் அறுவைசிகிச்சை கூடத்தில் இருந்து வெளியே சென்று கைப்பேசியில் பேசத் தடையில்லை என்றாலும் அப்படிச் செய்யாதவர்களையே அறுவைசிகிச்சை மருத்துவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் தெரியவந்து உள்ளது.
சிங்கப்பூரில் நோயாளிகளுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதன் தொடர்பிலான பாதக சம்பவங்கள் மிகவும் அரிது.

