தேசிய அரும்பொருளகம் உள்பட இரு தேசிய நினைவுச் சின்னங்களில் மறுசீரமைப்புப் பணிகள்

தேசிய அரும்பொருளகம் உள்பட இரு தேசிய நினைவுச் சின்னங்களில் மறுசீரமைப்புப் பணிகள்

2 mins read
3b439aa1-7003-443c-a9b0-e3ea7f8649e0
-

வரும் ஆண்­டு­களில் இரு தேசிய நினை­வுச் சின்­னங்­களில் மறு­சீரமைப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்வின் டோங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் தேசிய அரும்­பொரு­ள­கம், சன் யாட் சென் நன்­யாங் நினைவு மண்­ட­பம் ஆகிய இரண்டு இடங்­க­ளி­லும் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் நடக்­க­வி­ருப்­ப­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

முன்­னாள் இஸ்­தானா கம்­போங் கிளாம், இஸ்­தானா ஆகிய இரண்டு தேசிய நினை­வுச் சின்­னங்­க­ளி­லும் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் நடை­பெ­ற­வுள்­ள­தாக 2021ஆம் ஆண்­டில் அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து இந்த அறி­விப்பு வந்­துள்­ளது.

தேசிய நினை­வுச் சின்­னங்­களைப் பாது­காக்­கும் திட்­டங்­கள் குறித்து திரு சீத்தோ யீ பின் (பொத்­தோங் பாசிர்) எழுப்­பிய கேள்­விக்கு திரு டோங் பதில் அளித்­தார். எதிர்­கா­லத் தலை­முறை­க­ளுக்­காக கட்­ட­டங்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்­ப­தற்­காக தேசிய நினை­வுச் சின்­னங்­களில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் அடிக்­கடி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தின் கட்­டட முகப்­பில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட இருப்­ப­து­டன் கட்­ட­டத்­தின் வச­தி­களும் மேம்­ப­டுத்­தப்­படும் என்று கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு அதன் அறிக்­கை­யில் தெரி­வித்­தது. அங்கு மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் இவ்­வாண்­டின் பிற்­பா­தி­யில் தொடங்கி 2025 வரை கட்­டம் கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­படும் என்று அமைச்சு விளக்­கி­ இ­ருந்­தது.

அரும்­பொ­ரு­ள­கத்­தின் நிரந்­தரக் காட்­சிக் கூடங்­களில் உள்ள தக­வல்­களை மாற்­று­வது தொடர்­பில் மறு­ஆய்வு செய்­யப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அரும்­பொ­ரு­ள­கத்­தில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும் கால­கட்­டத்­தில் பொது­மக்­கள் தொடர்ந்து வருகை அளிப்­ப­தற்­காக அது திறந்­தி­ருக்­கும் என்­றும் சன் யாட் சென் நன்­யாங் நினைவு மண்­ட­பம் திறந்­தி­ருக்­காது என்­றும் கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே, 1867ஆம் ஆண்­டுக்­கும் 1869ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் கட்­டப்­பட்ட இஸ்­தா­னா­வில், அடுத்த ஆண்டு முற்­பா­தி­யில் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பழைமை, சுற்­றுச்­சூ­ழல் ஆகிய கார­ணங்­க­ளால் கட்­ட­டங்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­பு­களை இத்­த­கைய மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் சரி­செய்­யும் என்று அமைச்சு விளக்­க­ம் அளித்­தது.