மென்பொருள் பொறியாளருக்கு 7.6% சம்பள உயர்வு சாதனை

மென்பொருள் பொறியாளருக்கு 7.6% சம்பள உயர்வு சாதனை

1 mins read
8d2e3d6c-618d-4384-9d1b-477ef2af8ada
சிங்­கப்­பூர் கணினி மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­க­ளுக்­கான சம்­ப­ளம் சென்ற ஆண்­டில் இது­வரை இல்­லாத அள­வுக்கு 7.6% கூடி­யது. படம்: பிக்ஸாபே -

சிங்­கப்­பூர் கணினி மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­க­ளுக்­கான சம்­ப­ளம் சென்ற ஆண்­டில் இது­வரை இல்­லாத அள­வுக்கு 7.6% கூடி­யது.

வரு­டாந்­திர தொழில்­நுட்­பத் துறை சம்­பள அறிக்கை நேற்று வெளி­யி­டப்­பட்­டது. அதன்­மூ­லம் இந்த நில­வ­ரம் தெரி­ய­வந்­தது.

இள­நிலை பொறி­யா­ளர்­களுக்­கான சரா­சரி அடிப்­படை சம்­ப­ளம் $5,000 ஆக இருந்­தது. அது மூத்த பொறி­யா­ளர்­க­ளுக்கு $8,000 ஆக­வும் பொறி­யி­யல் துறை நிர்­வா­கி­க­ளுக்கு $13,750 ஆக­வும் இருந்­த­தாக 'நோட்­ஃபி­ளார்', 'இட்­ட­ரெட்­டிவ்' என்ற இரண்டு அமைப்­பு­கள் வெளி­யிட்ட அறிக்கை கூறு­கிறது.

அந்­தத் துறை­யில் கீழ்­மட்ட 10 விழுக்­காடு ஊழி­யர்­க­ளின் ஊதி­யத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், மேல்­மட்ட ஊழி­யர்­க­ளின் சம்­பளம் முறையே $8,500, $12,000, 19,000 ஆக இருந்­தது. சிங்­கப்­பூ­ரில் இதர தொழில்­நுட்ப ஊழி­யர்­க­ளின் ஊதி­ய­மும் சென்ற ஆண்­டில் கணி­ச­மா­கக் கூடி­யது.

முதல்­நி­லை­யில் இருக்­கும் 15 நிறு­வ­னங்­களில் ஆறு நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய ஊழி­யர்­க­ளுக்குச் சரா­சரி சந்தை அள­வை­விட குறைந்­த­பட்­சம் 20 விழுக்­காடு அதி­க­மாக சம்­ப­ளம் கொடுத்­தன.

அத்­த­கைய நிறு­வ­னங்­களில் 'டிக்­டாக்' செய­லி­யின் தாய் நிறு­வ­ன­மான 'பைட்­டான்ஸ்' முத­லி­டத்­தில் இருந்­தது. மற்ற ஊழி­யர்­களின் ஊதி­யம் குறைந்­த­பட்­சம் 10% அதி­க­மாக இருந்­தது.

இத­னி­டையே, இந்த நில­வரம் பற்றி கருத்து கூறிய நோட்­ஃபிளார் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஈத்­தன் ஆங், தொழில்­நுட்­பத்துறை­யில் தேர்ச்­சி­மிக்­கோருக்குத் தேவை இது­வரை இல்­லாதபடி அதி­க­மாக உள்ளது.

ஆகை­யால், சம்­ப­ள­மும் சாதனை அள­வுக்கு உயர்ந்து இருக்­கிறது என்று தெரி­வித்­தார்.

தொழில்­நுட்­பத் தொழில்­துறை தலை­சி­றந்த ஆற்­றல்­மிக்­க­வர்­களைக் கவர்ந்து ஈர்ப்பதிலும் அவர்­களை தக்­க­வைத்­துக் கொள்­வ­திலும் தொடர்ந்து சவால்­களை எதிர்­நோக்­கும் என்­றா­ர­வர்.