300,000 வெளிநாட்டினரின் மத்திய சேம நிதி கணக்குகள் மூடப்பட வேண்டும்

300,000 வெளிநாட்டினரின் மத்திய சேம நிதி கணக்குகள் மூடப்பட வேண்டும்

2 mins read
6c4b2758-0da3-4e2b-9930-c41a6f1f5863
-

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வாசி­கள் அல்­லாத வெளி­நாட்­டி­ன­ரின் ஏறக்­கு­றைய 300,000 பேரின் மத்­திய சேம நிதி (மசே நிதி) கணக்­கு­கள் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்­குள் மூடப்­பட வேண்­டும். இந்­தக் காலக்­கெ­டு­வுக்­குப் பிறகு, அவை தானா­கவே மூடப்­படும்.

இந்­தக் கணக்­கு­கள் குடி­மக்­கள் அல்­லா­த­வர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தங்­கள் மசே நிதி கணக்­கு­களில் தன்­னிச்­சை­யாக பணம் நிரப்­பு­வது நிறுத்­தப்­பட்ட 2003ஆம் ஆண்­டுக்கு முன் தொடங்­கப்­பட்­டவை.

மீத­முள்ள எந்­த­வொரு சேமிப்­புக்­கும் நடை­மு­றை­யில் உள்ள மசே நிதி வட்டி விகி­த­மும் அளிக்­கப்­ப­டாது. மீத­முள்ள சேமிப்பை எந்த நேரத்­தி­லும் அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு மாற்­றிக்­கொள்­ள­லாம் என்று மசே நிதி கழ­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இந்த மசே நிதி கணக்­கு­களில் சில, குடி­யு­ரிமை அல்­லது நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யைத் துறந்­த­வர்­களை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கும்.

பெரும்­பா­லான கணக்­கு­களில் குறைந்த தொகையே உள்­ளது. 200,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பல ஆண்­டு­க­ளாக $5,000க்கும் குறை­வான தொகை­யையே இக்­க­ணக்­கில் கொண்­டுள்­ள­னர். ஏனெ­னில், சிங்­கப்­பூர் வெளி­நாட்­டி­ன­ருக்­கான மசெ நிதி பங்­க­ளிப்­புக் கொள்­கை­யில் பல்­வேறு மாற்­றங்­க­ளைச் செய்து வந்­துள்­ளது.

1987ஆம் ஆண்­டுக்கு முன்­னர், குடி­யு­ரிமை பேத­மின்றி நாட்­டில் பணி­பு­ரி­யும் அனைத்து ஊழி­யர்­களுக்­கும் மசே நிதி பங்­க­ளிப்பு கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

பின்­னர் ஒர்க் பர்­மிட்­டில் பணி­பு­ரி­ப­வர்­கள் தங்­கள் மசே நிதி கணக்­கில் கட்­டா­யப் பங்­க­ளிப்­பு­களைச் செய்­வ­தற்­குப் பதிலாக, தன்­னிச்­சை­யா­கப் பங்­க­ளிப்­புச் செய்­யும் முறைக்கு மாற்­றப்­பட்­டது. 1995ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் அனைத்து வெளி­நாட்­டி­ன­ருக்­கும், எத்­த­கைய வேலை அனு­மதி அட்­டையை வைத்­தி­ருப்­போ­ருக்­கும் இது விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

2003ஆம் ஆண்­டில் தன்­னிச்­சை­யாக பணம் நிரப்­பு­வது நிறுத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் சேமிக்­கத் திட்­ட­மி­டும் வெளி­நாட்­டி­னர், துணை ஓய்­வூ­தி­யத் திட்­டம் அல்­லது வணிக முத­லீட்­டுத் திட்­டங்­கள் உள்­ளிட்ட பிற தெரிவு­க­ளைப் பரி­சீ­லிக்­க­லாம் என்று மசே நிதி கழ­கத்­தின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேல் விவரங்களுக்கு மசே நிதி கழகத்தின் cpf.gov.sg/AccountClosure என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம்.