சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்ட டைசன் ஊழியருக்கு செயல்திறன் போனஸ் வழங்காத நிலையில், வாழ்க்கைச் செலவின உயர்வால் அதிகம் பாதிப்படைந்துள்ள, கிட்டத்தட்ட 90 விழுக்காடு ஊழியர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் தொகையைக் கொடுக்கிறது. மேலும், ஊழியருக்கு நாடு வாரியாக சம்பள உயர்வும் வழங்குகிறது. கடந்த ஆண்டு டைசன் நிறுவனத்துக்கு விற்பனை கூடியது. ஆனாலும், செலவினங்கள் அதிகரித்ததால் லாபம் குறைந்தது. அந்நிறுவனம் நேற்று முன்தினம் இதனைத் தெரிவித்தது.
அக்குழுமத்தின் வருவாய் 2022ல் 8.3 விழுக்காடு கூடி £6.5 பில்லியன் (S$10.4 பி.) ஆனது. 2021ல் அதன் வருவாய் £6 பில்லியனாக இருந்தது

