தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மண்டாய் விலங்கியல் தோட்டத்தில் கடந்த ஆண்டு புதிதாகக் குடியேறிய 800 குட்டிகள்

2 mins read
83d1354a-7965-48ce-87eb-c95019bdc5d5
-

சிங்­கப்­பூ­ரின் நான்கு வன­வி­லங்­குப் பூங்­காக்­களும் அரு­கி­வ­ரும் உயி­ரி­னங்­கள் உட்பட புதி­தா­கக் கிட்­டத்­தட்ட 800 குட்டி விலங்­கு­

க­ளைக் கடந்த ஆண்டு வர­வேற்­றன.

இந்­தக் குட்டி மிரு­கங்­கள் 126 உயி­ரி­னங்­க­ளைச் சேர்ந்­தவை என்று மண்­டாய் வன­வி­லங்­குக் குழு­மம் நேற்று தெரி­வித்­தது.

அனைத்­து­லக பாது­காப்பு ஒன்­றி­யத்தின் அழி­யும் ஆபத்­தில் இருக்­கக்­கூ­டிய இயற்­கை­சார் உயி­ரி­னங்­க­ளின் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்ள 38 விலங்­கு­களும் இந்­தப் புதிய வரு­கை­யில் அடங்­கு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் வன­வி­லங்­கு பூங்கா, நைட் சஃபாரி, ஜூரோங் பற­வைப் பூங்கா, ரிவர் ஒன்­டர்ஸ் ஆகிய நான்கு இடங்­க­ளைக் குழு­மம் நிர்­வ­கித்து வரு­கிறது.

ஜூரோங் பற­வைப் பூங்­கா­வின் செயல்­பா­டு­கள் கடந்த ஆண்­டோடு முடி­வ­டைந்­த­போ­தும் அதற்கு முத்­தாய்ப்­பாக 22 ஆண்டு­க­ளுக்­குப் பிறகு அழி­யும் ஆபத்­தில் இருக்­கக்­கூ­டிய 'காக்­கட்டூ' வகை ஒன்­றின் வருகை அமைந்­தது.

இந்­தோ­னீ­சி­யா­வில் நடக்­கும் சட்­ட­வி­ரோத வன­வி­லங்கு வர்த்­த­கத்­தா­லும் இருப்­பிட இழப்­பா­லும் மிக அரு­கி­விட்ட இந்த வகை பற­வை­யின் குஞ்சு, ஜூரோங் பற­வைப் பூங்­கா­வின் இனப்­

பெ­ருக்க, ஆய்வு நிலை­யத்­தில் மனிதர்களால் வளர்க்­கப்­பட்­டது.

விலங்­கி­யல் தோட்­டத்­தின் ஆக வய­தான நீர்­யா­னைத் தம்

­ப­திக்கு 14வது கன்று பிறந்­த­தும் சிறப்­பான ஒரு வரு­கை­யாக இருந்­தது.

இந்த நீர்­யா­னைக் கன்று அண்­மை­யில் அதன் அம்­மா­

வு­டன் பெரிய, ஆழ­மான குளம் கொண்ட காட்­சிக்­கூ­டத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதற்­கி­டையே, இனப்­பெ­ருக்­கம் செய்­வ­தற்கு அதி­கச் சவால் விடுக்­கும் ஓர் உயி­ரி­ன­மான ராட்­சச எறும்பு உண்ணி தொடர்­பில் ரிவர் ஒன்­டர்ஸ் சாதனை படைத்­தது. பூங்­கா­வில் பிறந்த ஐந்­தா­வது எறும்பு உண்ணி இது.

முன்­ன­தாக 2011ல் 160 உயி­ரி­னங்­க­ளைச் சேர்ந்த ஏறத்­தாழ 900 புதிய விலங்­கு­களை வர­வேற்ற நிலை­யில், கடந்த ஆண்­டின் எண்­ணிக்கை சற்று சரிந்து இருந்தது.